नव नारी कुंजर
பாரத நாட்டு சனாதன தர்மம்
மனித வாழ்க்கையின் துன்பங்கள் இன்பங்கள்
ஆகியவற்றை
சிற்பங்கள் மூலம் கதைகளாக விளக்கி
மனதை ஆன்மாவில் ஒன்று படுத்தி
ஆனந்தமாக வாழ வழிகாட்டுகிறது.
அவ்வாறு சிற்பக்கலையில் பல கதைகள்
வழிகாட்டி மனதை அடக்கி
ஆன்மீக வழியில் எடுத்துச் செல்கிறது.
அவ்வாறான ஒரு சிற்பமே
நவநாரி குஞ்சரம்.
நலம் என்றால் ஒன்பது.
ஒன்பது பெண் களைக் கொண்ட யானை சிற்பம்.
சிவனின் மாயா தேவி வடிவம் பெண்கள்.
மனித வாழ்வின் இன்பங்கள் துன்பங்கள்
அனைத்து மாயா தேவி பெண் உருவமாக படைத்துள்ளார்.
அதனால் ஆன்மீக வழி காட்டுவோர்
பெண்ணாசை மின்னி ஆன்மீக பக்தி வழியில் செல்ல வேண்டும்.
அதற்கு பாரத சனாதன தர்ம
ஆசாரியர்கள்
பிரம்மச்சாரிகளாக வாழ்ந்தனர்.
புத்தர் மகாவீரர்
ஆதி சங்கரர்
விவேகானந்தர்
அனைவரும் துறவிகள்.
ஆனால் அனைவரும் துறவிகள் ஸ்ல ஆக வேண்டும் என எந்த மதமும் கூறவில்லை.
கிறிஸ்தவ மதத்தில் பாதரியார்
கன்னியாஸ்திரிகள் திருமணவாழ்க்கை ஏற்பதில்லை.
மக்களை நல்வழிப்படுத்த
பெண் மண் பொன் ஆசையில் இருந்து
மனதைக் கட்டுப்படுத்த
புலனடக்கம் தேவை என்பதை வலியுறுத்தினர்.
இப்பொழுது நவநாரி குஞ்சரம்
என்றால்
வாழ்க்கை நவரச மனோபாவங்களால் ஆனது.
இதில் சிருங்கார ரசம் என்பது ஆண் பெண் காதலுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
இதில் கட்டுப்பாடு தேவை.
இது தான் பூலோக வாழ்க்கை யின்
இன்றைய துன்பங்கள் போட்டி பொறாமை பேராசை காமம்
ஆகியவை உள்ளடக்கியது.
இதனால் ஏற்படும் ரசங்கள் தான் கருணை
பயம்
வீரம்
குரோதம் ஆச்சரியம்
வெறுப்பு
இன்னல்.
இந்த நவரசங்களுக்கு
ஆதாரமாக இருப்பது பெண்கள்.
இந்த நவநாரிகள் கொண்ட யானை சிற்பம் ஏன் என்றால் யானை நிதானத்துடன் செயல் படும் குணம் கொண்டது.
அதிக நினைவாற்றல் அறிவு மிக்கது.
கூட்டமாக வாழும் சமூக உணர்வு.
வலிமை.
தன் மாவுத்தனுக்கு கட்டுப்பட்டது.
வளர்ப்பு மிருகம்..
இந்த அனைத்து குணங்கள் கொண்டவர்கள்
பெண்கள்.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.
ஆகையால் நவரசங்கள் தரும் பெண்கள்
அந்த சிற்பம் காணும் ஆண்கள்
யானை போல்
நிதானமாக செயல் படவேண்டும்.
பழநி சே.அனந்தகிருஷ்ணன்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஹிந்து மேல் நிலைப் பள்ளி,திருவல்லிக்கேணி,சென்னை

No comments:
Post a Comment