Tuesday, January 31, 2017

சிவமயம்

நீதி நூற் கொத்து
மூலமும் உரையும்

ஒளவையார் அருளிய
ஆத்திசூடி

ஒளவையார் அருளிய
கொன்றை வேந்தன்

உலகநாதனார் இயற்றிய
உலக நீதி

அதிவீரராமபாண்டியன் இயற்றிய
வெற்றிவேற்கை (நறுந்தொகை)

ஒளவையார் அருளிய
வாக்குண்டாம் (மூதுரை)

ஒளவையார் அருளிய
நல்வழி

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
நன்னெறி

வெளியீடு
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்
1983

முன்னுரை

தமிழுக்கும் தமிழ்பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை தரும் அருமை வாய்ந்த நூல்களில் அற நூல்களும் ஒரு தொகுதியாகும். ஆத்திசூடி முதல் திருக்குறள் வரையுள்ள அறநூல்களை அறியார் இல்லை. சின்னஞ்சிறு குழந்தைகள் மழலை மொழியோடு மழலை மொழியாகப் பயிலும் ஆத்திசூடியின் அரும்பெரும் விளக்கம் ஆண்டுகள் கழியவே புலனாகின்றது. அந்த வகையில் அமைந்த இந்த நீதி நூற்கொத்து மூலமும் உரையும் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பயன்படும் என்பது எங்கள் நம்பிக்கை.

“திருஆலவாய்’
யாழ்ப்பாணம்
18 - 7 - 83

க. கனகராசா
உரியாளர்
(மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்)

யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் திரு. தி. நாகரத்தினம் அவர்களால் அச்சிடப்பெற்று, மில்க்வைற் சவர்க்காரத் தொழிலக அதிபர் திரு. க. கனகராசா அவர்களால் வெளியிடப்பெற்றது.

சிவமயம்

ஆத்திசூடி

உரையுடன்

காப்பு

ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

ஆத்தி - திருவாத்திப் ப+மாலையை சூடி - தரிப்பவராகிய சிவபெருமான், அமர்ந்த - விரும்பிய, தேவனை - பிள்ளையாகிய விநாயகக் கடவுளை, ஏத்தி ஏத்தி - துதிக்கத் துதித்து, தொழுவோம் - வணங்குவோம், யாழ் - நாங்கள் என்றவாறு

அறஞ்செய விரும்பு.   धर्म -कर्म  करना   चाह.

அறம் - தருமத்தை செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசைகொள்ளு. 1

ஆறுவது சினம்.    क्रोध  तो दबाने  का  भाव  है.

ஆறுவது - (உன்னுள்ளே) தணிய வேண்டுவது, சினம் கோபமே ஆம். 2

இயல்வது கரமேல் --जो   दे  सकते  हो  वही  कहो .

இயல்வது - (கொடுப்பதற்கு) இசைவதை, கரவேல் - (நீ வறுமையினாலே யாசிப்பவர்களுக்கு) ஒளியாதே. 3

ஈவது விலக்கேல்.    दान- धर्म  देना  मत  रोक.

ஈவது - (தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர்) கொடுப்பதை, விலக்கேல் - நீ தடுக்காதே.
4

உடையது விளம்பேல்.    --अपनी  संपत्ति  दूसरों  से  मत  बताओ.

உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல்
(நீ மற்றவர் அறியும்படி) சொல்லாதே 5

ஊக்கமது கைவிடேல்.----निरुत्साह  कभी मत   होना.

ஊக்கமது - (செய் தொழிலில்) மனஞ் சோராமையை கைவிடல் - நீ கைவிடாதே 6

எண்ணெழுத் திகழேல்  --गणित  और `व्याकरण  पर हंसी मत उडाओ.

எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - நீ இகழ்ந்து தள்ளாதே. 7

ஏற்ப திகழ்ச்சி दूसरों   से  मांगकर  जीना हीन  है.

ஏற்பது (ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்சி - பழிப்பாகும் 8

ஐய மிட்டுண்----माँगों  को देकर   खाओ .

ஐயம் - பி;ச்சையை, இட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்து, உண் - நீயும் உண். 9

ஒப்புர வொழுகு  --सांसारिक  व्यवहार  जान  समझकर  बर्ताव   करो.

ஒப்புரவு - உலக நடையை அறிந்து, ஒழுகு - (நீ அந்த வழியிலே) நட. 10

ஒதுவ தொழியேல்.---आजीवन  सीखना  मत  छोड़ो.

ஓதுவது - (அறிவு நூல்களை) வாசிப்பதை, ஒழியேல் - (நீ மரணபரியந்தம்) விடாதே 11

ஒளவியம் பேசேல்---ईर्ष्यालू   बातें   मत  करो .

ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - நீ போதே 12

அஃகஞ் சுருக்கேல்.--अनाज को तौलकर देने  में   कम  मत  करो.(अधिक लाभ  पर  मत बेचो )

அஃகம் - தானியத்தை, சுருக்கேல் - (அதிக இலாபத்துக்காகக்) குறையாதே. 13

கண்டொன்று சொல்லுவேல்.  जो  देखा वही बोलो .  ( झूठी गवाह  मत दो )
கண்டு - (ஒன்றைக்) கண்டு - வேறொன்றை, சொல் வேல் - (நீ சாட்சியாகும்போது) சொல்லாதே. (கண்டபடியே சொல் என்பது கருத்து) 14

நுப்போல் வளை---मदद गार बनकर अपनी जाति  की  रक्षा  कर.

நுப்போல் - நகரம் ( தான் பிரயோசனமுள்ள தாய் இருந்து தன் வருத்தத்தை தழுவுதல்) போல், வளை - (நீ பிரயோசனமுள்ளவனாயிருந்து உள் இனத்தைத்) தழுவு.

நுகரமானது அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் என்று சொல்லுக்குக் காரணமாய் வரும் அதின் வருக்கங்களாகிய நூ நுp நுP ங ங+ ஙெ ஙே ஙொ ஙோ ஙௌ என்கின்ற பதினென்றும் சொல்லுக்குக் காரணமாதல் இல்லை. ஆயினும் நரகத்தின் பொருட்டு இவைகளையும் நெடுங்கணக்கிலே வழங்குவார்கள். அதுபோலவே, நீ கல்வி செல்வங்களினாலே பிறருக்கு உதவி செய்வாயின், அவர் உன்னைத் தழுவுவதன்றி உன்பொருட்டு உன் இனத்தாரையும் தழுவுவார் என்பதாம். 15

சனி நீராடு----शनिवार को तेल  मालिशकर  स्नान  करो

சனி - சனிக்கிழமைதோறும், நீர்ஆடு - (எண்ணெய் இட்டுக்கொண்டு) நீரிலே தலை முழுகு. (புதன்கிழமையிலும் முழுகலாம்) 16

ஞயம்படவுரை.--मधुर सुखी   बातें   बोलो.

ஞயம்பட - (பேசுஞ் சொல்லிலே) இன்பம் விளையும்படி, உரை - நீ பேசு (நயம் என்பது ஞயம் எனப் போலியாற்று) 17

இடம்பட வீடெடேல்-- मकान  बड़ा मत  बनाओ .

இடம் - இடமானது, பட - (அளவுக்கு மேற்பட்டு) வெறுமையாய்க் கிடக்கும்படி, வீடு - வீட்டை, எடெல் - (நீ பெரிதாகக் கட்டாதே. 18

இணக்கமறிந் திணங்கு--सद्गुण    जान -समझ  मित्रता अपनाओ .

இணக்கம் - (சிநேதத்துக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - தெளிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) சிநேகஞ் செய். 19

தந்தைதாய் பேண்---माता -पिता  की सेवा  करो.

தந்தை - (நீ உன்) பிதாவையும், தாய் - மாதாவையும், பேண் - (எப்பொழுதும் ப+சித்துக்) காப்பாற்று. 20

நன்றி மறவேல்.-- कृतज्ञता  मत भूलो. ऋण  चुकाओ .

தந்தை - (நீ உன்) பிதாவையும், தாய் - மாதாவையும், பேண் - (எப்பொழுதும் ப+சித்துக்) காப்பாற்று 21

பருவத்தே பயிர்செய்.---मौसम  में खेती  कर.

பயிர் - பயிர்களை, பருவத்தே - (அது அது விளையும்) பக்குவகாலத்திலே, செய் - (வேண்டும் முயற்சியிலே வழுவாமல்) செய். 22

பயிருக்கு வேண்டும் முயற்சிகளாவன் உழுதல், எருஇடுதல், களை பிடுங்குதல், நீர்பாய்ச்சல், காத்தல் என்கிற ஐந்துமாம்.

மன்றுபறித் துண்ணேல்---न्यायाधीश   पद  पर   बैठकर   फरियादियों से घूस  लेकर  मत  जीओ.

மன்று - தருமசபையில் இருந்துகொண்டு, பறித்து - (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - நீ சிவனம் பண்ணாதே. 23

இயல்பலாதன செயேல்.---धर्म  ग्रन्थ  के  विरुद्ध कर्म  मत  करो.

இயல்பு அலாதன - (தருமநூலுக்குப்) பொருத்தமல்லாதவைகளை, செயேல் - நீ செய்யாதே.
24

அரவ மாட்டேல்.---विषैली  जंतुओं से  मत  खेलो.

அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - நீ பிடித்து ஆட்;டாதே. 25

இलவம்பஞ்சிற் றுயில்---- सेमर  के  बिस्तर  पर  सोओ.

இலவம் பஞ்சில் - இலசம் பஞ்சு மெத்தையில், துயில் நீ நித்திரை கொள்
26
வஞ்சகம் பேசேல்----कपट की  बातें  मत  कर.

வஞ்சகம் - கபடவார்த்தைகளை, பேசேல் - நீ பேசாதே. 27

அழகலா தனசெயேல்---  हीन  कर्म  किसी भी  अवस्था  में  मत  कर.

அழகு அலாதன - (நீ துன்பப்பட வந்த காலத்தும்) இழிவுள்ள செயல்களை, செயேல் - செய்யாதே.

அழகுடையவன உயர்வுள்ள செயல்கள், ஆதலால், அழகலாதென இழிவுள்ள செயல்கள் என்பதாம். 28

இளமையிற் கல்---   ब्रह्मचारी की  अवस्था  में  ही शिक्षा  सीखो .

இளமையில் - இளமைப் பிராயத்திலே, கல் - (நீ வித்தையை விரும்பிக்) கற்றுக்கொள். 29

அறனை மறவேல்.----धर्म   मत  भूलो.

அறனை - தருமத்தை, மறவேல் - (நீ ஒருபோதும்) மறவாதே. 30

அனந்த லாடேல்.--- कम निद्रा   मत  कर. (नशीली नशें  मत सोओ)

அனந்தல் - நித்திரையை, ஆடேல் - (நீP அதிகமாகச் செய்யாதே. (அனந்தல் - கள் மயக்கமுமாம்.) 31

கடிவது மற.---- क्रोध की बोली भूलो.

கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - நீ மறந்துவிடு 32

காப்பது விரதம்-----सब की रक्षा करना  ही   व्रत   है.

காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல்) அவைகளைக் காப்பாற்றுவதே, விரதம் - விரதமாம் 33

கிழமைப் படவாழ்---दूसरों  के  लिए  जिओ .

கிழமைப்பட - (உன்னிடத்தில் உள்ள பொருள் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - நீ வாழு
34
கீழ்மை யகற்று.----निम्न गुण   छोड़ो .

கீழ்மை - கீழ்மையாகிய குணத்தை, அகற்று - நீ நீக்கு, 35

குணமது கைவிடேல்.--सद्गुण मत छोड़ो

குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடல் - நீ விட்டுவிடாதே 36

கூடிப் பிரியேல்  --सज्जनों की  मित्र  न  छोड.

கூடி - (நல்லவரோடு சிநேகித்து, பிரியேல் - (நீ பின் அவரை விட்டு) நீங்காதே 37

கெடுப்ப தொழி---दूसरों  की हानी करना  छोड़ो

கெடுப்பது - (பிறருக்குக்) கேடு செய்வதை, ஒழி - நீ விட்டுவிடு 38

கேள்வி முயல்-- सदुपदेश   सुनो .

கேள்வி - (கற்றவர் சொல்லும் நூற்பொருளைக்) கேட்பதற்கு, முயல் - நீ முயற்சி செய். 39

கைவினை கரவேல்.---कुटीर उद्योग -हस्त कला  मत  भूलो.

கைவினை - (உனக்குத் தெரிந்த ) கைத்தொழிலை, கரவேல், (மற்றவர்களுக்கு) ஒளியாதே.
40
கொள்ளை விரும்பேல்.---डाका  डालना  मत   चाहो .(लालची  से  बचो )

கொள்ளை - (பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல் - நீ ஆசைப்படாதே
41
கோதாம் டொழி.----अपराध का  खेल  छोड़ो .

கோது - குற்றம் பொருந்திய, ஆட்டு - விளையாட்டை, ஒழி - நீ நீக்கு. 42

சக்கர நெறிநில்.--राजाज्ञा  का  पालन  कर.  (सरकारी  आज्ञा  का   अनुकरण   कर

சக்கர நெறி - (அரசனுடைய ஆஞ்ஞையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில் - நீ அடங்கி நில். (அரசனுடைய கட்டளைக்கு அமைந்து நட என்பது கருத்து) 43

சான்றோ ரினத்திரு.  ---सत्संग और शिक्षितों   के  साथ  रह.

சான்றோர் - அறிவினாலே நிறைந்தவர்களுடைய, இனத்து கூட்டத்திலே, இரு - (நீ எந்நாளும் சேர்ந்து) இரு 44

சித்திரம் பேசேல்--- सत्य  के  रूप   का  झूठ  मत  बोल.

சித்திரம் மெய்போலத் தோன்றும் பொய்மொழிகளை, பேசேல் - நீ பேசாதே 45

சீர்மை மறவேல்---यश्प्रद    गुण  मत  भूल.

சீர்மை - புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல் - நீ மறந்துவிடாதே. 46

சுளிக்கச் சொல்லேல்.---क्रोध   उत्पन्न  करने  की  बात  मत करो .

சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக, சொல்லுவேல் (நீ ஒன்றையும்) பேசாதே. 47

சூது விரும்பேல் ---जुआ खेलना --कपट  मत चाहो .

சூது - சூதாடலை, விரும்பேல் - (நீ ஒருபோதும்) விரும்பாதே. 48

செய்வன திருத்தச் செய்  जो  करते  हो ,सही अनुपात में  करो.

செய்வன - செய்யும் காரியங்களை, திருத்த - செல்வையாக , செய் - நீ செய் 49

சேரிட மறிந்துசேர்.--जिससे  मिलकर  चाहते हो ,उसे सही पहचान  लो.

சேர்இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து, சேர் - நீ அடை
50
சையெனத் திரியேல்.--ऐसे  कार्य मत  करो ,जिससे बसदे छी ! छी ! कहें.

சை என - (பெரியோர் உன்னைச்) சீ என்று அனைவருக்கும் படி, திரியேல் - (நீ துட்டனாய்த்) திரியாதே. 51

சொற்சோர்வு படேல்.  ---जो  कहना  हैं ,उसे  मत भूलो.

சொல் - (நீ பிறரோடு பேசும்) சொற்களிலே, சோர்வு படேல் - மறதிபடப் பேசாதே. (சொல்லவேண்டுவதை மறவாமற் சொல் என்பது கருத்து) 52

சோம்பித் திரியேல்--आलसी  से मत रहो .

சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல் கொண்டு, திரியேல் (வீணாகத் திரியாதே. 53

தக்கோ னெனத்திரி.  ---ऐसे चलो -फिरो  कि  दुसरे तुम्हें  योग्य  कहें

தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி - நீ திரி 54

தானமது விரும்பு--दान करना  चाहो ,सद्पात्रों को  दान  करो.

தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு - நீ விரும்பு 55

திருமாலுக் கடிமைசெய்--विष्णु  का  दास   बनो.

திருமாலுக்கு - விஷ்ணுவுக்கு, அடிமை செய் - தொண்டு செய். 56

தீவினை யகற்று. ----पाप  कर्म हटाओ.

தீவினை - பாவச் செயல்களை, அகற்று - (நீ செய்யாமல்) நீக்கு. 57

துன்பத்திற் கிடங்கொடேல்--दुःख  को स्थान  मत  दो.

துன்பத்திற்கு - (தொழிலைச் செய்யும்போது முயற்சியினாலே வரும் சரீரப்பிரயத்;தால் ஆகிய) துன்பத்துக்கு, இடம் கொடேல் - (சிறிதாயினும்) இடங் கொடாதே. (அத் துன்பத்தை இன்பமென்று கொண்டு முயற்சியை விடாது செய் என்பது கருத்து. 58

தூக்கி வினைசெய்--सोचकर तौलकर  कर्म करो.

தூக்கி - (முடிக்கும் உபாயத்தை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய் - (நீ அதன் பின்பு) செய். 59

தெய்வ மிகழேல்.--ईश्वर  की निंदा मत  करो.

தெய்வம் - கடவுளை, இகழேல் - (நீ மறந்தாயினும்) இகழாதே. 60

தேசத்தோ டொத்துவாழ்.---जिस  देश  में रहते  हो  उस देश के साथ रहो.

தேசத்தோடு - (நீ வசிக்கும்) தேசத்திலுள்ளவர்களுடனே ஒத்து (பகையில்லாமல்) ஒற்றுமையாய், வாழ் - வாழு 61

தையல்சொற் கேளேல்----पत्नी की बात  मन मान.ह

தையல் - (உன்) மனைவியுடைய, சொல் - சொல்லை, கேளேல் - நீ கேட்டு நடவாதே 62

தொன்மை மறவேல்---पुरानी   दोस्ती   मत भूलो.


தொன்மை - பழைமையாகிய சிநேகிதத்தை, மறவேல் நீ மறந்துவிடாதே 63

தோற்பன தொடரேல்---- हार जाने  के  मुकद्दमा   में सम्बन्ध छोड दो.

தோற்பன - தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல் - நீ சம்பந்தப்படாதே. 64

நன்மை கடைப்பிடி--हित का अनुसरण  करो.

நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி - (நீ விடாமல்) உறுதியாகப் பிடி

நாடொப் பனசெய்  ऐसे  कार्य  करो ,जिसे सब मानें.

நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும், ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை, செய் - நீ செய் - 66

நிலையிற் பிரியேல். --अपनी सद स्थिति  से  मत हटो

நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையில் நின்று பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே. 67

நீர்விளை யாடேல்--गहरे पानी  में तैरकर  मत  खेलो.

நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடல் - நீ (நீந்தி) விளையாடாதே. 68

நுண்மை நுகரேல் ---रोग सोचो ,जलपान न   खाओ.

நுண்மை - (நோயைத் தகுதி) சிற்றுண்டிகளை, நுகரேல் - உண்ணாதே 69

நூல்பல கல். कई ग्रथों  को  सीखो.

நூல்பல - (அறிவை வளர்க்கின்ற) நூல்கள் பலவற்றையும், கல் - நீ கற்றுக்கொள் 70

நெற்பயிர் வினை---धान  की खेती करो.

நெற்பயி;ர் - நெல்லுப் பயிரை, விளை - (நீ வேண்டிய முயற்சி செய்து) விளைவி. 71

நேர்பட வொழுகு.--ईमानदारी  से चलो.

நேர்பட - (உன் ஒழுக்கம் கோணாமல்) செலவைப்பட, ஒழுகு - நீ நட 72

நைவினை நணுகேல்.--दूसरों को बरबाद  करने  का  काम  मत  करो.

நை - (பிறர்) கெடத்தக்க, வீனை - தீவினைகளை, நணுகேல் - (நீ ஒரு போதும்) செய்யாதே. 73

நொய்ய வுரையேல்  अनुपयोगी  बात   मत   कर.

நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல் - (நீ ஒரு பொழுதும்) சொல்லாதே. 74

நோக்கிடங் கொடேல்.---रोग को  स्थान  मत दो.

நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல் - (அவபத்தியம் முதலானவைகளைச் செய்து) இடங்கொடாதே. 75

பழிப்பன பகரேல்---अपयश  की  बात  मत करो.बुरे  शब्द  मत बोलो.

பழிப்பன - அறிவுடையவர்களாலே) பழிக்கப்படுவனவாகிய இழிசொற்களை, பகரேல் - நீ பேசாதே.

இழி சொற்களாவன ; பொய், குறளை, குடுஞ்சொல், பயணிச்சொல் என்கிற நான்குமாம். 76

பாம்பொடு பழகேல்.---बुरे  लोगों  से सम्बन्ध  न  रखो.

பாம்பொடு - (பால் கொடுத்தவருக்கும் விஷயத்தைத் கொடுக்கிற) பாம்பைப் போல்பவர்களுடனே, பழகேல் - நீ சகவாசஞ் செய்யாதே.

பிழைபடச் சொல்லேல்---गलत  बात  मत  कहो.

பிழைபட - பிழைகள் உண்டாகும்படி, சொல்வேல் - (நீ ஒன்றையும்) பேசாதே.

பீடு பெறநில்---सगर्व   खड़े रहो.-

பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக, நில் - நீ (நல்ல வாழ்விலே) நில்.

புகழ்ந்தாரைப் போற்றிவாழ்---तेरे प्रशंसक  की स्तुति करो .

புகழ்ந்தாரை - உன்னைத் துதிசெய்து அடுத்தவரை, போற்றி, (கைவிடாமற்) காப்பாற்றி, வாழ் - நீ வாழு 80

பமி திருத்தியுண்--खेती  करके  खाओ .

ப+மி - உன் விளை நிலத்தை, திருத்தி- சீர்திருத்திப் பயிர்செய்து, உண் - நீ உண்ணு. 81

பெரியாரைத் துணைக்கொள்.--बड़ों को सहायक बनालो.

பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியேரை, துணை கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்கொள். 82

பேதைமை யகற்று.==अज्ञान  दूर  करो .

பேதைமை - பிறவிக்குக் காரணமாகிய) அஞ்ஞானத்தை, அகற்று - (நீ மெய்ஞ்ஞானத்தினாலே) போக்கு. 83

பையலோ டிணங்கேல்--छोटों  से  दूर  रहो.

பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - நீ கூடாதே பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - நீ கூடாதே. 84

பொருடனைப் போற்றிவாழ்---धन को प्रशंसा कर जिओ .

பொருள் தனை - திரவியத்தை, போற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ் - நீ வாழு 85

போர்த்தொழில் புரியேல்-- लड़ाई   का  काम   मत  करो.

போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை, புரியேல் - நீ செய்யாதே. 86

மனந்தடு மாறேல்---दृढ़  मन  से रहो.

மனம் - மனசு, தடுமாறேல் - யாதொரு விஷயத்திலும்) கலங்காதே. 87

மாற்றுனுக் கிடங்கொடேல்--अन्यों  को स्थान  मत  दो.

மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடங்கொடேல் - உன்னை நெருங்கிப் பின் வருந்தும்படியாக நீ இடங்கொடாதே . 88

மிகைபடச் சொல்லேன்---अधिक  मत  बोलो.

மிகைப்பட - (சொற்கள் சுருங்காமல்) அதிகப்படும்படி, சொல்லேல் - நீ சொல்லாதே. 89

மீதூண் விரும்பேல்.---अधिक  भोजन  मत  करो.

மீது ஊண் - அதிக போசனத்துக்கு, விரும்பேல் - நீ ஆசைப்படாதே. 90

முளைமுகத்து நில்லேல்.--लड़ाई -झगड़ों   के स्थान  पर  मत खड़े रहो.

முனைமுகத்து - சண்டை முகத்திலே, நில்லேல் - (நீ போய்) நில்லாதே 91

மூர்க்கரோ டிணங்கேல்---मूर्खों  से  दूर  रहो.

மூர்க்கரோடு - அறிவில்லாதவர்களுடனே, இணங்கேல் - நீ சினேகம் பண்ணாதே. 92
மெல்லினல்லா டோள்சேர்.---अपनी पत्नी से  ही प्यार करो. वेश्याओं  से दूर रहो.

மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்டியாகிய, நல்லாள் - பெண்ணினுடைய, தோள் - தோள்களையே, சேர் - நீ சேர்

இதனாலே, பிறர் மனைவியர், பரந்தையர் என்கிற இவர்களை ஒருபோதும் விரும்பாதே என்பது பெறப்படும். 93

மேன்மக்கள் சொற்கேள்--बड़ों   की  बात  मानो.

மேன்மக்கள் - மேன்மையாகிய மனிதருடைய, சொல் சொல்லை, கேள் - நீ கேட்டு நட. 94

மைவிழியார் மனையகல்.---वेश्याओं के यहाँ  मत जा.

மை விழியார் - மை தீட்டிய கண்களையுடைய வேசிகளது, மனை - வீட்டை, அகல் ( நீ ஒரு போதும் கிட்டாமல்) அகன்று போடு. 95

மொழிவ தறமொழி--बगैर  शक  के बोलो.

மொழிவது - சொல்லப்படும்பொருளை - அற - (சந்தேகம்) நீங்கும்படி, மொழி - நீ சொல்லு)
96
மோகத்தை முனி--  मोह   को हटा  दो.

மோகத்தை (நிலையில்லாத பொருள்களின் மேலதாகிய) ஆசையை, முனி - கோபித்து விலக்கு ; 97

வல்லமை பேசேல்.---अपनी  क्षमता की  प्रशंसा  मत कर.

வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல் - (நீ புகழ்ந்து) பேசாதே. 98

வாதுமுற் கூறேல்--बड़ों   के  सामने  चर्चा  मत करो.

வாது - வாதுகளை, முன் - (பெரியோர்) முன்னே, கூறேல் - நீ பேசாதே. 99

வித்தை விரும்பு--- शिक्षा हुनर चाहो.

வித்தை - கல்விப் பொருளை, விரும்பு - நீ விரும்பு ; 100

வீடு பெறநில்--मोक्ष  पथ  पर चल.ज्ञान मार्ग अपनाना.

வீடு - மோஷத்தை, பெற அடையும்படி, நில் - (அதற்குரிய ஞான வழியிலே) நில் 101

உத்தம னாயிரு--उत्तम  रह .

வீடு - மோஷத்தை, பெற அடையும்படி, நில் (அதற்குரிய ஞான வழியிலே) நில் 102

ஊருடன் கூடிவாழ்-- अपने  शहर  के  लोगों   से मिलकर रखो.(सुख -दुःख  में भाग  लो )

ஊருடன் - ஊரவர்களுடனே, கூடி (சுபாசுபகன்மங்களிலே) அளாவி, வாழ் - நீ வாழு 103

வெட்டெனப் பேசேல்---नाता -रिश्ता ,दोस्ती  काटने के  शब्द  मत बोल.

வெட்டு என - கத்தி வெட்டைப் போல, பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே. 104

வேண்டி வினைசெயேல்-- लाभ को  सोचकर  बुरे  कर्म  मत  करो.

வேண்டி, (யாதொரு பிரயோசனத்தை) விரும்பி, வினைதீவினைளை, செயேல் - (நீ ஒருவனுக்கும்) செய்யாதே. 105

வைகறைத் துயிலெழு-- प्रातः काल  जल्दी  उठो.

வைகறை - (நீ தினந்தோறம்) விடியற்காலத்திலே, துயில் எழு - நித்திரையை விட்டு எழுந்திரு 106

ஒன்னாரைத் தேறேல்---दुश्मनों   पर  भरोसा  मत रखो.

ஒன்னாரை - பகைவர்களை, தேறேல் - (நீ ஒருபோதும்) நம்பாதே 107

ஓரஞ் சொல்லேல்--पक्षपात  से  दूर  रहो.

ஓரம் - பஷபாதத்தை, சொல்லேல் - (நீ யாதொரு வழக்கிலும்) பேசாதே. 108

கொன்றைவேந்தன்
உரையுடன்

காப்பு

கொன்றை வேந்தன் செல்வ னடியிணை
என்று மேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய, வேந்தன் சிவபெருமானுக்கு, செல்வன் - குமாரனாகிய விநாயகக் கடவுளுடைய, அடி இணை - பாதங்களிரண்டையும், என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் - வணங்குவோம், யாம் நாங்கள்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

अम्मा  -अप्पा   माँ  -बाप   दोनों   जाने -पहचाने  देव   है.

அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன்முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவர். 1

ஆலயந் தொழுவது சாலவு நன்रु

आलय  देव     की प्रार्थना  बहुत  कल्याण   दायिनी   है

ஆலயம் - கோயிலுக்குப்போம், தொழுவது - கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும், நன்று - நல்லது. 2

இல்லற மல்லது நல்லற மன்று.-- गृहस्थ  जीवन  ही  सुधर्म  है;संन्यास  जीवन   नहीं  है


இல்லறம் - மனைவியாளோடு கூடிச் செய்யும் அறமானது, நல் அறம் - எளிதிற் செய்யத்தரும் அறமாகும். அல்லது - இல்லறமல்லாத துறவறமானது, அன்று - எளிதிற் செய்யத்தரும் அறமன்றாகும். 3

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்--  कंजूसों  की  संपत्ति  को बुरे लोग  भोगेंगे.

ஈயார் - கொடாதவருடைய தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், கொள்வர் அபகரிப்பர் ; 4

உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு  --कम  भोजन  करना औरतों को शोभा प्रद   है.

உண்டி - போசனம், சுருங்குதல் - (அளவிற்) குறைகள், பெண்டியர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும். 5

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். शहर   की दुश्मनी जड़ मूल  बरबाद .

ஊருடன் - (தான் இருக்கும்) ஊராருடன் பகைக்கின் - (ஒருவன்) விரோதித்தால், வேருடன் - (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான். 6

எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகும் -- गणित  और  अक्षर  आँखों  के  बराबर  है.

எண்ணும் - கணிதநூலும், எழுத்தும் - இலக்கணநூலும், கண் எனத் தகும் - (மனிதருக்கு) கண்களென்று சொல்லப்படும். 7

ஏவா மக்கள் மூவா மருந்து  --आज्ञा  के  पहले  ही संकेत जानकार संतान   काम  करेंगे  तो वे  संतानें  देवामृत  के  सामान   है.

ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுவதற்கு முன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள், மூவா மருந்து - (அப் பெற்றவருக்குத்) தேவாமிர்தம் போல்வர். 8

ஐயம் புகினும் செய்வன செய். जो शुभ  काम  करना  है ,उसे भीख  लेकर  भी  कर दो.

ஐயம் புகினும் - பிச்சையெடுத்தாலும், செய்வன - செய்யத்தகும் கருமங்களை, செய் - நீ (விடாது) செய். 9

ஒருவனைப் பற்றி ஓரகத் திரு  सद गुणी  को  पहचानकर  वहीं रहो.

ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப்) பற்றிக்கொண்டு, ஒரகத்து - ஓரிடத்திலே தானே, இரு நீ (எப்போதும்) வாசம் பண்ணு. 10

ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்  विप्रों  को अनुशान  वेदों  के अध्ययन  से श्रेष्ठ  है.

வேதியர்களுக்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் - ஆசாரமானது ஓதலின் - (வேதம்) ஓதலினம், நன்று - நல்லது 11

ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு  ईर्ष्या   करना  दौलत  का  नाश  है.

ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல் - (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்துக்கு அழிவு - கேட்டைத் தருவதாகும். 12

அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு.  --द्रव्य और रुपयों  को बगैर व्यर्थ के  कमाओ .

அஃகமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும் சிக்கெனத் தேடு - நீ வீண்செலவு செய்யாமற் சம்பாதி 13

கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை. पतिव्रता  का  मतलब  है  पति  की आज्ञा  मानना.

கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல், (கணவர்) சொல்லுக்கு , திறம்பாமை, தப்பி நடவாமையாம். 14

காவல் தானே பாவையர்க் கழகு.--अपनी पतिव्रता धर्म की खुद रक्षा  कर   लेना स्त्रीयों के  लिए  शोभा   है.

காவல் தானே - (கற்புக்கு அழிவு வராமல் தம்மைக்) காத்துக் கொள்வதுதானே, பார்வையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும். 15

கிட்டா தாயின் வெட்டென மற.--जो कुछ  मिलना  असंभव  है ,उसे  तुरंत भूल दो.

கிட்டாது ஆயின் ’’ (இத்சித்த ஒரு பொருள்) கிடையாதானால், வெட்டென - சீக்கிரத்திலேதானே, மற -(அப்பொருளை) மறந்துவிடு. 16

கீழோ ராயினுந் தாழ வுரை.   --छोटों से भी विनम्र व्यवाहार और विनम्र बोली  बोलो.

கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்) கீழ்ப்பட்டவராயிருந்தாலும், தாழ - (உன்சொல்) வணக்க முடைய தாய் இருக்கும்படி, உரை - (நீ அவருடன்) பேசு. 17

குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை.--गलतियों और अपराधों  को देखें  तो नाता-रिश्ता  नहीं .

குற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால், சுற்றம் - உறவாவோர். இல்லை - (ஒருவரும்) இல்லை. 18

கூரம் பாயினும் வீரியம் பேசேல்.   तेज  बाण  हाथ  में है तो भी व्यर्थ बात  मत करो.

கூர் அம்ப ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத்தன்மையை பேசேல் - (நீ வீணாகப் பேசாதே. 19

கெடுவது செய்யின் விடுவது கருமம்  --दोस्त  बुरा  करने  पर  दोस्ती छोड़ना  उत्तम  कर्म  है.

கெடுவது - கெடுவதை, செய்யின் - (தன் சினேகிதன்) செய்தால், விடுவது - (அவன் சினேகத்தை) விடுவதே, கருமம் - (விவேகிக்கு) நற்செய்கையாம். 20

கேட்டி லுறுதி கூட்டு முடைமை. --बरबाद  के  समय दृढ़ चित्त  से  रहने से  जो कुछ गंवाना  पड़े फिर  कमा  सकते  हैं.

கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்திலே, உறுதி - மனந்தளராமை, உடைமை - முன்போல அப்பொருளுடையவனாந் தன்மையை, கூட்டும் - சேர்க்கும். 21

கைப்பொரு டன்னின் மெய்ப்பொருள் கல்வி. अपनी संपत्ति से  बड़ी  है  शिक्षा.

கைப்பொருள் தன்னில் - கையிலிருக்கின்ற பொருளைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் - அழியாத பொருளாவது, கல்வி கல்வியேயாம். 22

கொற்றவ னறித லுற்றிடத் துதவி   राजा किसी से  परिचित  हो तो समय  पर मदद  मिलेगा,

கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருத்தல், உற்ற இடத்து - (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி உதவியாகும். 23

கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு.----किसी के  पीछे उसपर  आरोप लगाना  आग  जैसा जलेगा.

கோட்செவி - கோள் கேட்குங் குணத்தோனுடைய காதிலே குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன் - காற்றுடனே சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப்போல மூளும். 24

கௌவை சொல்லி னெவ்வருக் கும்பகை---दूसरों  के  निंदक  सब का  बनेगा  दुश्मन.

கௌவை - (பிறர்மேலே) பழிச் சொல்லுகளை, சொல்லின் - (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லோருக்கும், பகை - அவன் பகையாவான். 25

சந்ததிக் கழகு வந்திசெய் யாம--अपने वंश वृद्धि  की  शोभा अपनी  पत्नी से मिलकर  रहना.

சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலடியாக, செய்யாமை - செய்யாமல் ( தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம். 26

சான்றோ ரென்கை ஈன்றோட் கழகு.--
माता  की शोभा  अपने  पुत्र को चतुर विद्वान  बनाना.

சான்றோர் என்கை - (தன் புத்திரரைக்) கல்வியறிவால் நிறைந்தோர் என்று (கற்றவர்) சொல்லுகிறது. ஈன்றோட்கு பெற்றவளுக்கு, அழகு - அழகாகும். 27

சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு.
शिव  की प्रार्थना तपस्या  की शोभा.

சிவத்தை - (முதற் பொருளாகிய) பரமசிவத்தை, பேணின் (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - அவன் செய்யும் தவத்திற்கு, அழகு - அழகாம். 28

சீரைத் தேடி னேரைத் தேடு.--सौभाग्य  के  लिए खेती करो.

சீரை - சௌபாக்கியத்தை, தேடின் (உனக்குத்) தேடுவாயானால், ஏரை - பயிரிடுந் தொழிலை, தேடு - நீ தேடிக் கொள்ளு. 29

கற்றத்திற் கழகு சூழ விருத்தல்  --नाते -रिश्ते  की शोभा  मिलकर घेरकर रहना.

சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு அழகாவது, சூழ் (சுபாசுப கருமங்களிலே பலரும் வந்து) சூழ, இருத்தல் - (சமீபங்களிலே) குடியிருக்கையாகும். 30

சூதும்; வாதும் வேதனை செய்யும்.  जुआ  खेलना  और  वाद  करना दुखप्रद  है.

சூதும் - சூதாடுதலும், வாதும் - தருக்கம் பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும். 31

செய்தவ மறந்தாற் கைதவ மாளும். --तपस्या  का भूलना अज्ञानता को शासक बनाना .

செய்தவம் - செய்;யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமை கொண்டு) ஆளும். 32

சேமம் புகினும் யாமத் துறங்கு--कारावास में रहने  पर  भी साढ़े सात

சேமம் - காவற்கூடத்திலே, புகினும் - போய் (ஒரு வேலையும் இல்லாமல்) இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப்பின், உறங்கு - நீ நித்திரை பண்ணு. 33

சையொத் திருத்தா லைய மிட்டுண்.---पैसे हो तो भीख देकर  खाओ.

சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால், ஐயம் இட்டு - பிச்சை இட்டு, உண் - நீயும் உண்ணு. (சை - பொருள்) 34

சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்.---जिसके  पास  सोना  है,वह पुरुषार्थ  प्राप्त  करेंगे.

சொக்கர் என்பவர் - பொன்னுடையவர் என்று சொல்லப்படுவோர், அத்தம் - (அறமும் இன்பமுமாகிய மற்றைப்) புருஷார்த்தங்களையும், பெறுவர் - பெறுவார். (சொக்கு - பொன்)
35
சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர். आलसी   दरिद्रता के दुःख भोगेंगे .

சேம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவார். 36

தந்தைசொன் மிக்க மந்திர மில்லை.---पिता   के शब्द से बढ़कर   कोई  मंत्र  नहीं  है.

தந்தை - பிதாவினுடைய, சொல் - சொல்லுக்கு, மிக்க மேற்பட்ட, மந்திரம் - (பலனைத்தரும்) மந்திரமானது, இல்லை (ஒருவனுக்கு எந் நூலிலும்) இல்லை. 37

தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை.---माताजी  से  बढ़कर  कोई मंदिर  नहीं  है.

தாயின் - மாதாவைப் பார்க்கிலும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும், - ஒரு ஆலயமும், இல்லை - (ஒருவனுக்கு எங்கும்) இல்லை. 38

திரைகட லோடியுங் திரவியந் தேடு. तरंगों  के  समुद्र पारकर भी द्रव्य जोड़ो.

திரைகடல் - அலை பொருந்திய கடலிலே, ஓடியும் - (தோணியேறித் தூரதேசங்களிற்) போயானாலும், திரவியம் - திரவியத்தை, தேடு - நீ சம்பாதி 39

தீராக் கோபம் போரா முடியும். --जो क्रोध पूरा  नहीं होता वह युद्ध में  समाप्त होता.

தீரா - நீங்காத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் - முடிந்து விடும். 40

துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு.पति के कष्ट पर दुखी न होनेवाली औरत गोद में  बांधे आग  के सामान  है.

துடியா - (தன் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - அக்கினிக்கு ஒப்பாவார். 41

தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்  -अपने पति पर इल्जाम  लगानेवाली यम  के  बराबर  है.

தூற்றும் - (தன் கணவன்மேற் குற்றஞ் சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத்தகும் - (அவனுக்கு) யமன் எண்ணத்தகும். 42

தெய்வம் சீறிற் கைதவ மாளும்.ईश्वर   नाराज होंगे  तो प्राप्त तप पुण्य  का  भी नाश  होगा.

தெய்வம் - தெய்வமானது, சீறின் - (ஒருவனைக் கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்த தவமும், மாளம் - (பயன் கொடாமல்) அழியும். 43

தேடா தழிக்கிற் பாடா முடியும்.--खुद  न कमाए   संपत्ति को खर्च करें तो दुःख ही बचेगा जान.

தேடாது - ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல், அழிக்கின் - இருக்கிற பொருள்களைச்) செலவழித்தால், பாடா முடியும். (அவனுக்குப்) பின் வருத்தமாக முடியும். 44

தையும் மாசியும் வையகத் துறங்கு--पूस -माघ  महीने  में  भोस्सों की कुतिया में सोओ .सर्दी से  बचने .

தையும் - தை மாதத்திலும், மாசி - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனி வருத்தந் தராத) வைக்கோலினால் வேய்ந்த வீட்டிலே, உறங்கு - நீ நித்திரை செய். 45

தொழுதூண் சுவையி னுழுதூ னினிது--दूसरों से माँगी  भोजन खाने  से खुद खेती  करके  खाना  आनंद दायी  है.

தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊன், உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப் பார்க்கிலும், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை - இனிது - இன்பந் தருவதாகும். 46

தோழ னோடு மேழைமை பேசேல்  भले   ही दोस्त हो उससे अपनी गरीबी मत बोल.

தோழனோடும் - (உன்) சிநேகிதனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கின்ற) சிறுமையை, பேசேல் - (நீ எப்படிப்பட்ட வேளையிலும்) பேசாதே. 47

நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்--- अच्छे सहवास  न  होना दुखप्रद  है.

நல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம் அல்லாதது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண்டாக்கும். 48

நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை----देश भर  समृद्धि  हो  तो कोई बुरी घटना न होगी

நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்;குமாயின், கேடு ஒன்றும் - (திருட்டு முதலாகிய) கேடொன்றும், இல்லை - இல்லையாம். 49

நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை---शिक्षितों का  लक्षण वागीश्वर  बनना .वचन  निभाना.

நிற்க - (ஒருவன் தகுதியான வழியில்) நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொல்லுகளிலே, திறம்பாமை - (ஒரு போதும்) தப்பி நடவாமையாம். 50

நீரகம் பொருந்திய வரகத் திரு---जहां पानी  की  कमी  न हो वहीं   रहो.

நீர் - நீர்வளமானது - தனக்குள்ளே, பொருந்திய (மழையில்லாத பஞ்சத்திலும்) அமைந்த, ஊரகத்து - ஊரினிடத்தே, இரு நீ குடியிரு. 51

நுண்ணிய கருமமு மெண்ணித் துணி --छोटे कर्म  को भी सोचकर करो.

நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (முடிக்கும் வழியை நன்றாக) ஆலோசித்து, துணி - (நீ முன்பு அதைச்) செய்யத் துணி. 52

நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு--धर्म ग्रंथों को सीखकर शील से  रहो. गुण शील बनो.

நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு - நீ நட. 53

நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை.मन  में  छिपी धोखे के  सामान  और कोई धोखा  नहीं.

நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த - மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை (யாவரிடத்திலும்) இல்லையாம். 54

நேரா நோன்பு சீரா காது-- मन  न  लगें तो वह व्रत नहीं  है.

நேரா - மனசினால் உடன்படாத, நோன்பு - தவமானது, சீர் ஆகாது - சீர்பெற முடியாது. 55

நைபவ ரெனினும் நொய்ய வுரையேல். श्रोता वाद न करके दुखी होगा  तो कठोर  शब्द  मत बोलो.

நைபவர் எனினும் - (கேட்போர் எதிர் பேசாமல்) வருந்துவோராயினும், நொய்ய - அற்ப வார்த்தைகளை, உரையேல் - நீ சொல்லாதே. 56

நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்--अआकार में छोटे लोग  भी अपने अपूर्व  असाध्य कर्म  से  बड़े बन  जायेंगे.

நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - (செய்காரியத்தால்) யாவரும் விரும்புங் குணத்தையுடையவராவர். 57

நோன்பென் பதுவே கொன்றுதின் னாமை  --तपस्या  का मतलब  है  माँस  न  खाना.

நோன்பு என்பது - தவம் என்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சிவனை) வதை செய்து, தின்னாமை - (அதன் மாசிசத்தை) தின்னாமையேயாம். 58

பண்ணிய பயிரிற் புண்ணியந் தெரியும்---पुन्य-पाप  का  फल   अपने  खेत  के पैदावार  से पता  चलेगा.

பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரில் - விளைவினாலும் விளைவின்மையினாலும், புண்ணியம் - (அவ்விடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும். 59

பாலோ டாயினுங் மறிந்துண்----भोजन दूध सहित होने  पर  भी समय पर खाओ.

பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத் தகும்) காலத்தை அறிந்து, உண் - (நீ அதை) உண்ணு. 60

பிறன்மனை புகாமை அறமெனத் தகும்--पराई स्त्री से इच्छा न  रखना  ही बड़ा धर्म है.

பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - எல்லாத் தருமங்களினும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும் . 61

பீரம் பேணி பாரந் தாங்கும்--माँ  का दूध पीकर  बढनेवाला ताकतवर बनेगा.--

பீரம் பேணி - முலைப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான் (அதுபோல முன்னே காரணங்களைக் குறைவறக் கொண்டவன் பின்னே பெரிய காரியங்களையும் வருத்தமின்றி முடிப்பான்) 62

புலையுங் கொலையுங் களவுற் தவிர்  माँस  खाना ,हत्या  करना ,चोरी करना आदि से बचो.

புலையும் - புலால் உண்ணுதலையும், கொலையும் - சீவவதை செய்தலையும், களவும் - பிறர் பொருளைத் திருடுதலையும், தவிர் - (நீ செய்யாது) ஒழித்துவிடு. 63

பரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம்  --निम्न लोगों   को अनुशासन की रुकावटें  नहीं. वे अनुशासन   हीन  रहेंगे.

ப+ரியோர்க்கு - கீழ்மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - தடையானது, இல்லை - (உண்டாதல்) இல்லையாம் 64

பெற்றோர்க் கில்லை சுற்றமும் சினமும்---ज्ञानी  को  न नाता -न इच्छा न क्रोध  न घृणा .

பெற்றோர்க்கு - (மெயஞ்ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும் சினமும் - (மற்றவர் மேல்) வெறுப்பும், இல்லை - இல்லையாகும். 65

பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்---नारियों का भोषण  जानी बात को भी अनजान  सा  रहना .

பேதைமை என்பது - மடம் சொல்லப்படுங் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரணமாகும்.

மடம் - அறிந்தும் அறியார் போன்றிருத்தல். 66

பையச் சென்றால் வையந் தாங்கும்--योग्य उचित पथ पर चलनेवालों को संसार बड़ा मानेगा.

பைய - மௌ;ள, சென்றால் - ஒருவன் தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - ப+மியிலுள்ளோர், தாங்கும் - (அவனை) மேலாகக் கொள்வர். 67

पोजनम மென்பது தானுழந் துண்டல்===अपने मेहनत  से  खाना  ही भोजन  है.

போனகம் என்பது - போசனம் என்று சொல்லப்படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப்பட்டுச் சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம். 69

மருந்தே யாயினும் விருந்தோ டுண்----अमृत को भी मेहमानों  के  साथ  खाओ.

மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைப்பதற்கரிய) தெவாமிர்தமேயானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளிகளோடு கூடி, உண் - நீ உண்ணு. 70

மாரி யல்லது காரிய மில்லை--वर्षा न हो तो काम नहीं.

மாரியல்லது - மாரியினால் அல்லாமல், காரியம் - யாதொரு காரியமும், இல்லை - யாவருக்கும் நடப்பது இல்லை 71

மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை जितनी बिजली चमकती ,बाद में उतनी  ही वर्षा  होगी.

மின்னுக்கு எல்லாம் - வானத்திற் காணப்பட்ட மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - (அப்பொழுது மழையில்லையாயினும்) பின்னே மழை உண்டாகும். (அதுபோல ஒருவனிடத்திலே காணப்பட்ட நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பயன் உண்டாகும்.) 72

மீகாம னில்லா மரக்கல டோடாது--मल्लाह बगैर नाव  नहीं चलेगी .

மீகாமன் - தன்னை ஒட்டத்தக்க மாலுமி, இல்லா - இல்லாத, மரக்கலம் - தோணியானது, ஓடாது - கடலிலே செவ்வையாக ஓடாது. (அதுபோல நல்வழியில் நடத்தும் தலைவனில்லாத குடும்பமும் வேந்தனில்லாத நாடும் முதலியன செவ்வையாக நடைபெறமாட்டா.) 73

முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்  किसी को बुराई  करें  तो  बाद  में  हमें  बुराई होगी.

முற்பகல் - ஒரு முகூர்த்த காலத்தின் முன்பங்கிலே, செய்யின் - (பிறருக்குத் தீங்கு) செய்தால், பிற்பகல் - அதன் பின்பங்கிலே, விளையும் - (செய்தவனுக்கு அது தீங்கு தானே) உண்டாகும். (பகல் - முகூர்த்தம்) 74

மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்   पूर्व  ज्ञानियों  की बातें अमृत  है.

மூத்தோர் - (கல்வியறிவினாலே) முதிர்ந்தவர், சொன்ன சொல்லிய, வார்த்தை - வார்த்தையானது, அமிர்தம் - தேவாமிர்தத்தைப் போலும். 75

மெத்தையிற் படுத்தல் நித்திரைக் கழகு==गद्दीदार बिस्तर में  सोना शोभनीय है.

மெத்தையில் - பஞ்சணையிலே, படுத்தல் - படுத்தலானது நித்திரைக்கு - (ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழகு அழகாகும். 76

மேழிச் செல்வங் கோழை படாது----कृषी  की संपत्ति  कभी  कम न होगी .

மேழி - கலப்பை பிடித்து உழுது, பயிர்செய்தலால் உண்டாகின்ற, செல்வம் - செல்வமானது, கோழைபடாது - ஒரு போதும் குறைவை அடையாது. 77

மைவிழி யார்தம் மனையகன் றெழுகு---वेश्यागमन  मत  करो .

மைவிழியார்தம் - மைதீட்டிய கண்ணையுடைய சேவிகளது, மனை - வீடுகளை, அகன்று ஒழுகு - நீ அணுகாமலே விலகி நட. 78

மொழிவது மறுக்கி னழிவது கருமம்=शिक्षितों  की  बात न  मानने  से धंधा में नुक्सान .

மொழிவது - கற்றோர் சொல்லுகின்ற உபாயத்தை, மறுக்கின் - கேளாமற் செய்தால், கருமம் - (ஒருவன் செய்யுந்) தொழில், அழிவது - கெடுவதாகும். 79

மேமான மென்பது ஞான வரம்பு   मौन  ब्रह्म ज्ञान  की चरम सीमा


மேமானம் என்பது - மௌன நிலை என்பது, ஞானம் - மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு - எல்லையாகும். 80

வளவ னாயினு மளவறிந் தளித்துண் अमीर होने  पर  भी सोच -समझकर दान  करो.

வளவன் ஆயினும் - (சம்பத்திலே) சோழனுக்கு ஒப்பானவனாய் இருந்தாயானாலும், அளவு - (பொருள் வரவில்) அளவை, அறிந்து - தெரிந்து, அளித்து - கொடுத்து, உண் அனுபவி 81

வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் --वर्षा  की  कमी  दान को भी  कम  कर  देगा.

வானம் - மழையானது, சுருங்கின் - பெய்தல் குறையுமாயின், தானம் (சற்பாத்திரத்திற்குக்) கொடுக்கிற கொடையும், சுருக்கம் - குறைவுபடும். 82

விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்=अतिथि सत्कार न  करें तो अपने  गृहस्थ  जीवन   नहीं  के  बराबर  है.

விருந்து இல்லோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு, பொருந்திய - தாம் பொருந்திய, ஒழுக்கம் - இல்லறம், இல்லை (இருந்தாயினும்) இல்லாததற்கச் சமானமாகும்.
83
வீரன் கேண்மை கூரம் பாகும்=वीरों  की मित्रता तेज तीर सामान  है.

வீரன் - வீரனுடைய, கேண்மை - சிநேகம் (ஒருவனுக்கு இருந்தால்), கூர் அம்பு ஆகும் - (அவனுக்கு அதுவே தன் பகையை வெல்லுதற்குக்) கூர்மை பொருந்திய அம்பாகும். 84

உரவோ ரென்கை இரவா திருத்தல்=बलवान  का  मतलब  है ,किसी  भी हालत में  किसी से  न माँगना .

உரவோர் என்கை - வல்லவர் என்று சொல்லப்படுதல், இரவாது - (தமக்குச் சிறுமைவந்த கலத்திலும் பிறரை) இரவாமல், இருத்தல் - இருக்கையாம். 85

ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு=  उत्साह  ही   संपत्ति की शोभा  है.

ஊக்கம் - (செய்தொழிலே) மனந் தளராமையை, உடைமை - (ஒருவன்) உடையனாதல், ஆக்கத்திற்கு - அவன் செல்வத்திற்கு, அழகு - அழகாகும். 86

வெள்ளைக் கில்லைக் கள்ளச் சிந்தை==पवित्र मन वाले  कभी  ठगी  नहीं  होते.

வெள்ளைக்கு - களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளம் - வஞ்சனை பொருந்திய, சிந்தனை - நினைப்பானது, இல்லை - இல்லை. 87

வேந்தன் சீறி னாந்துணை யில்லை =राजकोप   के  व्यक्ति के कोई सहायक  नहीं  होते.

வேந்தன் - அரசனானவன், சீறின் - ஒருவனைக் கோபித்தால், ஆம் - (அப்பொழுது) அவனுக்கு (உதவி) ஆகின்ற, துணை - துணைவர். இல்லை - (ஒருவரும்) இல்லை. 88

வையந் தோறுந் தெய்வந் தொழு==तीर्थयात्रा  करके सभी देवों  से  प्रार्थना  करो.

வையந்தோறும் - ப+மியிலுள்ள தலங்கள்தோறும் (போய்), தெய்வம் - கடவுளை, தொழு - நீ தரிசித்து வணங்கு 89

ஒத்த விடத்து நித்திரை கொள்==समतल में  सोओ .

ஒத்த இடத்து - (மேடு பள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே, நித்திரை கொள் - (நீ படுத்து) நித்திரை கொள்ளு 90

ஓதாதார்க் கில்லை உணர்வோடு வொழுக்கம்--अशिक्षितों  को नहीं  अनुशासन और चालचलन .
ஓதாதார்க்கு - (அறிவு நூல்களைப்) படியாதவர்க்கு, உணர்வொடும் - அறிவுடனே, ஒழுக்கம் - நல்ல நடையும், இல்லை - (உண்டாதல்) இல்லை. 91

जो मिट गए वह धर्म था?

सुना था आज्ञाकारी अक्ष्य कुमार।
अंधे माता-पिता की सेवा की।
अल्प व्यक्ति में, दशरथ के बाण काम शिकायत बना।
आज्ञाकारी रामको जंगल में भटकना पडा।
पतिव्रता सीता को अग्नी में नहाना पडा।
भक्त ध्रुव को सोतेली मां का सताना सहना पडा।
प्रह्लाद को न जाने पिता ने कितना सताया।
सत्यवादी हरिश्चंद्र को श्मशान काम पहचान देना पडा।
भस्मासुर को वर देकर शिव को छिपना पडा।
भारत भूमि अति प्राचीन।असुरों द्वारा देव सताये गये।
देशहित और माँ बाप हित जो मिट गये वह धर्म था।।
என்ன கோபமோ?யார் மீது கோபமோ?
ஒவ்வொருவருக்கும் ஒரு குணம்.
அது இறைவன் கொடுத்துப் படைத்த திறன்.
பாம்புக்கு விஷம்.
தேளுக்கு கொடுக்கு.
புலி பாய்தல் .
ஒவ்வொன்றும் அறியும் நாம்
மனிதனை அறிவது மெத்த கடினம்.
சிரிப்பில் விஷம்.
கோபத்தில் அன்பு
கண்டிப்பில் பாசம்.
வெறுப்பில் அன்பு .
அன்பில் வெறுப்பு
மனித இனம் சசிபோல்.
தேயும் வளரும் . ஒளி தரும் . இருள் தரும்.
பிறை காணும் நாம் குறைகண்டால்
நட்பும் இல்லை. சுற்றமும் இல்லை.
வாழும் வரை நல்லதே செய்வோம்.
தீயவையும் நல்லவையும் சூழ்ந்த மனித இனம்.