Tuesday, January 24, 2023

கபீர்

 


श्री राम

जाको राखै साइयाँ मारी न सकैै कोय ।
बाल न बांका करि सकै,जो जग वैरी होय ।।

இறைவனால்  காப்பாற்றப்படும்  ஜீவனை ஒருவராலும் அடிக்கமுடியாது. 
உலகமே எதிரியானாலும்   ஜீவனக்கு அணு அளவு தீங்கும்  செய்யமுடியாது.

2.
கர்மயோகம்,
ஞானயோகம்,
பிரேமயோகம்,
பக்தியோகம்,
தியானயோகம்,
வரலாற்றுகற்பனைகள்,





அட்டவணை  

வரிசை எண்

தலைப்புகள்

பக்கம்

1.

பாரதப் பிரமதருக்கு நன்றி நவில்

3

2.

சமர்ப்பணம்


3.

மங்கல ஆசிச்செய்திகள்


4

எழுத்தாளர் கருத்து


5

சற்குரு கபீரின் அறிமுகம்


6

மனிதநேய வழிகாட்டிசற்குரு கபீரின் இலக்கியமும்ஈரடிகளும்


7

பாரதம் மற்றும்உலக அளவில்கபீர் பற்றிய சர்ச்சை


8

புதிய பாரதம் படைப்பதில்சற்குரு கபீரின் பங்களி்ப்பு


9

குணமற்ற உருவமற்ற வழிபாட்டில் கபீரின் குணமுள்ள உருமுள்ள வழிபாடு


10

சற்குரு கபீரின் லௌகீக ,அலௌகீக,ஆன்மீக எண்ணங்கள்.


11

கபீர் மார்க்கம்,கபீர் இலக்கியம் பரசார ஒளிபரப்பில் பணயாற்றும் நிறுவனங்கள்


12

சற்குரு கபீர் இலக்கிய பரசாரத்தில்சற்குரு கபீர் ஆஸ்ரம்,படிகாடுராஜஸ்தானின் பெரும் பங்களிப்பு


13

இந்த நூலின் சாரம்.


14.

சமுதாய சமரஸம் மற்றும் முன்னேற்றத்தன் சக்திவாய்ந்த தூண்ஸ்ரீ இந்திரஜீத் சர்மா ஜீ.




நவீனம்
தர்க்கம்
ஆகியவற்றால் பரிபூரணம்











पृष्ठ संख्या 30  से

புதிய  கால  பாரதம் படைப்பதில் சற்குரு
     
                கபீரின் பங்களிப்பு
================================
ஒற்றுமை,சமரசம்,நல்லுறவு,சம உணர்வு
ஆகியவை மூலம் உலக குரு ஆக்க முயற்சி
===============================
सद्गुरु कबीर जी का जीवन परिचय
சற்குரு கபீர் அவர்களின்
வாழ்க்கை அறிமுகம்
—------------------------------------

பக்தி திராவிடத்தில் தோன்றியது.  இராமனந்தர்  கொண்டுவந்தார் .
கபீர் ஏழு தீவுகளிலும்  ஒன்பது  கண்டங்களி்லும்  இத் தகவலை வெளிப்படுத்தினார்.
—-------------------------------------------------------------------------------


    நடுநிலையான  உருவமற்ற இறைவனை வழிபடுகின்ற சற்குரு கபீர் 15ஆம் நூற்றாண்டின் பக்திகால யுகத்தி்ல் மிக உயர்ந்த சமுதாய சீர்திருத்தவாதி . சாது வாகவும் கவியாகவும்   விளங்கினார். அவர்  ஹிந்து முஸ்லிம் மற்றும் அனைத்து சம்பிராதயங்களையும்
புதிய அறிவுரைக் கொள்கைக் கல்வி,  கருணை அணுகு முறையால்  பரிபக்குவப் படுத்தினார்.பக்தி கால யுகத்தில் வாழ்ந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் கடவுள் பக்தியும் உயர்ந்த எடுத்துக் காட்டு என
நிலைநாட்டினர். அவர்களில் முதலிடம் புனித கபீர் பெற்றிருந்தார்.அவர் சிறந்த ஆன்மகவாதி. அவர் 15ஆம் நூற்றாண்டில் ஹிந்தி இலக்கிய  கண்ணோட்டத்தில் மிக சக்திவாய்ந்த யுகத்தின் எண்ணங்களை மாற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் சிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தார் .
சற்குரு கபீர்தாசர் மறைந்து பல நூறு ஆண்டுகள் கழிந்தாலும் அவரின் இலக்கியபடைப்புகளில் கூறப்பட்ட  வாழ்க்கையின் அம்சங்களான வாய்மை,ஞானம்,சமுதாய சீர்திருத்தங்கள்,தேச ஒற்றுமை ,ஒருமைப்பாடு,ஆன்மீகம் இன்றும் புத்தம் புதியதாக இன்றைய காலத்திற்கேற்ப பயனுள்ளதாக தூண்டுகோலாக ஊக்கமளிப்பதாக விளங்குகிறது. பழமையாகத்தெரியவில்லை.சற்குரு கபீர் எளிய சொற்களால் பேச்சு மொழியில் சமுதாயத்தில் பரவிஇருக்கும் வேற்றுமை உணர்வுகள் முரண்பாடுகள்,ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் கள்ளம் கபடமின்றி தன் நூலான சாக்கி மூலம் நிரூபித்து ஒற்றுமை,மனிதநேயம் வளர்ப்பது,உலக ஒற்றுமை,சமரச உணர்வு ஆகியவற்றை விழிப்புணர்வு ஏற்படையச் செய்கிறது.
    ஏழ்மையின்  காரணமாக கபீர் பள்ளியில் படிக்க முடியவில்லை.அவர் குறிப்பேடு எழுதுகோல்  எடுத்ததில்லை.ஆனால் கண் முன் நடப்பவைகளை, சுற்றுச் சூழல்களை ஆழ்ந்து படித்தார் .அவர் தன் உயர்ந்த அனுபவத்தாலும் சாதனையாலும் பிரம்ம வித்யா அறியும் சாமார்த்தியத்தைப் பெற்றார்.
அவர் ஆத்மஞானம்,பிரம்ம ஞானம்,தத்துவ ஞானம்  பெற்ற சாதுவானார்.கபீர் வாய்மொழியாகக் கூறிய அற்புத வாக்கியங்களை எழுத்துரு கொடு்த்தது  அவர் சீடர்களே.
    

சற்குரு கபீரை உலகப்புகழ் பெறச் செய்த அவர் எழுதிய நூலி்ன் பெயர்–பீஜக். அந்நூலின் மூன்று பிரிவுகள்–ஸாக்கி, ஷபத்,ரமைணி.
அவருடைய காலத்தை வென்ற நூல்கள்–ரக்த,ஹோலி,ஸுக் நிதன்,வஸந்த்,அனுராக் ஸாகர் முலியவை.அவை பல யுகங்களுக்கு வழிகாட்டுபவை.கபீர் தன் படைப்பகளில் அறம்,பணபாடு,மனிதனின் அம்சங்கள் ஆகியவற்றோடு இணைந்த வெவ்வேறு மகத்துவம் நிறைந்த கண்ணோட்டங்களை விலக்களிப்பி்ன்றி  தன் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். சற்குரு கபீரின் கருத்தாழமிக்க 25 தோகைகளை நிகழ்காலத்திற்குஏற்றவாறு விளக்கமளிக்கப் படுகிறது. அவை மனிதர்களை நல்வழிப்படுத்தி செழுமையாக்கும்.நல்ல எண்ணங்களைத் தூண்டும் வளமாகத்திகளும்.


போத்தி படி படி ஜக் முவா பண்டித் பயா ந கோய்.
டாயி அக்‌ஷர் ப்ரேம் கா ஸோ பண்டித் ஹோய்.
கபீரின் இந்த ஈரடி(தோஹா) பொதுவான பேச்சு மொழியில் எல்லோரும் சொல்வதைக் கேட்கிறோம். கபீரின் இந்த ஈரடி வழியாக மிகச் சிறந்த நூல்களைப் படித்து ஞானம் பெற்றாலும் கடவுளின் மீது அன்பு செலுத்தவில்லை என்றால் நூல்களால் பெற்ற ஞானத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை.இறுதி வரை ஆணவம் உள்ளவன் என்றே கருதப்படுவான். ஸ்ரீகிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் உத்தவ்விற்குத் தன் ஞானத்தின் மீது கர்வம் அதிகம். ஆனால் கிருஷ்ணரின் தூதராக கோகுலத்திற்குச் சென்றதும் ஞானத்தின் உச்ச நிலை பூமியில் பதி்ந்து விட்டது.அதாவது ஞான கர்வம் மடிந்துவிட்டது.
சுயநலமற்ற அன்பிற்கு முன்னால் நிற்கமுடியவி்ல்லை.கொள்கை கோட்பாடுகள் கொண்ட நூல்களின் ஞானத்தைவிட உண்மையான நடைமுறைக் காதல்/அன்பு மிகவும் உயர்ந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். குறிப்பிட்ட பாடத்திட்ட புத்தகங்களை மனப்பாடம் செய்து பெற்ற அறிவு தேர்வு முடிவுகளுக்குப்பின் அரசாங்க ஊழியர்களாகவோஅலுவலர்களாகவோ ஆகமுடியும்.மனித அன்பு அனுதாபம் என்ற மனநிறைவை உணரமுடியாது.புரிந்துகொள்ள முடியாது. இவர்களால் மனித நலம் முன்னேற்றம் என்ற பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது.தன்னை கடவுளுக்குச் சமம் ,கடவுளின் அவதாரம் என்று அறிவதே.ஆணவம் என்ற கிருமி அவர்கள் பணியை நாணயமாகவும் உண்மையாகவும்  அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த பணியினை செய்யவிடாது.இலவசமாக செய்ய வேண்டிய பணியை கையூட்டு பெற்று தன்அதிகாரப் பணிகளைச் செய்வான்.எதிரில் இருப்பவனை கடவுளின் அவதாரம் என்றும் நேரடியான கடவுள் என்றும் தற்புகழ்ச்சி ,லஞ்சம் என்ற சுழலில் சிக்கவைத்து பலவந்தப் படுத்துவான். இப்படிப்பட்ட தலைக்கனம் படைத்தவர்களுக்கு இந்த ஈரடி கவனமாக பரிசீலனை செய்யத் தூண்டுதலாகும்.
ஏதோ புண்ணிய பலனால் உயர் பதவி கிடைத்துள்ளது.சமதாயத்தின் அனைத்துப் பிரிவினர்களுக்கும் நடுவுநிலைமையுடன் உதவ வேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கக் கூடாது.
  ஆகையால் பணம் படைத்தவர்கள் விலைஉயர்ந்த நூல்கள் படித்து மேதையானாலும் உலகின் ஒவ்வொரு பொருளுடனும் அன்புடனான அணுகுமுறையில் ஞானம் பெறவில்லை என்றால் அவனை அறிவாளியாக உலகம் ஏற்றுக்கொள்ளாது.
—-----------------------------------------------------------------------
   

               [2]


  1. படா பயா தோ க்யா பயா,ஜைசா பேட் கஜூர்.
    பந்த்தி கோ சாயா நஹி ப்பல் லாகே அதி தூர்..

      கபீர் இந்த ஈரடியில் தன் அந்தஸ்து,புகழ்,செல்வந்தர்,தற்பெருமை
    ஆகியவற்றால் ஆணவமாக இருப்பவர்களை செம்மட்டியால் அடிக்கிறார். பணம்,அந்தஸ்து,பதவி ஆகியவற்றால் மிகவும் உயர்திருந்தாலும் சமுதாயத்தில் தம்மை விட மெழிந்தவர்களுடன் ஈரரக்கலந்து  அவர்களின் நிலை தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு உதவவில்லை என்றால் அவர்களின் பணம்,சொத்து,பதவியால் பயனில்லை.பெருமையில்லை.பனை மரம்,பேரீச்சை மரங்கள் உயரமானவை. அதன் பழங்கள் உயரத்தில் இருப்பதால்  அவைகளை சாதாரணமான மனிதன் பறித்துத் தின்று ருசிக்க முடியாது.மிக உயரமாக இருப்பதால் கீழே நிழலும் விழாது. வழிப்போக்கர்களுக்கு நிழலில் அமர்ந்து இளைப்பார முடியாது. அப்படித்தான் உதவாத செல்ந்தரகளால் பயன் இல்லை. பணம்,பதவி,செழுமை முற்பிறவியின் நல் வினைகளால் கிடைப்பது.முற்பிறவியின் புண்ணியத்தால் கிடைத்த  செல்வம் குறைந்து விட்டால்  நிலைமை மோசமாகி விடும். அதனால் கபீர் நற்செயல்கள்  மூலம் சுயநலமற்ற உதவிகள் செய்து மற்றவர்களுக்குக் கனியாகவும் நிழலாகவும்  இருந்து மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும்மரியாதையையும் பெற வலியுறுத்துகிறார்.



                  (3)
ஐஸீ வாணி போலியே மன்கா ஆபா க்கோஏ.

ஔரன் கோ ஷீதல் கரை, ஆபஹு ஷீதல் ஹோஏ.


 இந்த ஈரடியில் கபீர் விஷம்கலந்த கூரிய அம்பு போல் கடும் சொற்களால் மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தும் கேட்பவர்களின் மனதைத் துன்புறுத்தும் மனதில் ஆராத காயத்தை ஏற்படுத்தும் கடும் சொற்கள் உணரச்சி வசத்தால் பேசும் மக்களை கடுமையாக எச்சரிக்கிறார்.இந்த கடும் சொற்களின் தீய விளைவுகள் நீண்ட காலம் பாதிக்கும்.அதிகார பலத்தால் உடல் வலிமையால் இன்று பேசும் சொற்களைக்கேட்டு பேசாமல் பொறுத்துக் கொள்ளும் ஒருவன் மனதில் பழிவங்கும் அக்னி பற்றி எரிந்துகொண்டிருக்கும்.சந்தர்பம் பார்த்து பழி வாங்கும் போது பல வித கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏற்படும்.அங்கேயே இனிமையான சொற்கள் கற்கண்டும் தேனும் கலந்தது போல் பேசினால் நடக்க நடத்த முடியாத செயல்களும் எளிதாக நடந்துவிடும். இவ்வுலகில் அன்பை விட உயரந்த பொருள் ஏதும் இல்லை.உலகன் படைப்புகள் அணைத்தும் அன்பால் இணைந்துள்ளன.  அன்பு இல்லை  என்றால் இந்த படைப்புகள் உடனே அழி்ந்துவிடும். தாய்- தனயன் அன்பு,சகோர-சகோதரி அன்பு,உற்றார்-உறவினர் அன்பு, சமுதாயப்பற்று ,கதலன்-காதலி காதல், கணவன்-மனைவி அன்பு,பக்தன் -பகவன் அன்பு, பூமி,சந்திரன்-சூரியன்,கோள்கள்,நட்சத்திரங்கள் அன்பு ,இவைகளை நாம் புவிஈ்ப்பு விசையின் பலம் என்று சொல்கிறோம்.ஆனால் இவை எல்லாமே ஒரு காதலின் தென் படாத பந்தனத்தால் கட்டப்பட்டிருக்கின்றன.அதை நாம் பவி ஈர்ப்பு கோட்பாடு என்கிறோம்.

  நாம் வசிக்கும் பூமி தன் அச்சில் ஒரு மணிக்கு 1600 கி.மீ.,வேகத்தில் சுழல்கிறது. சூரியன் 108000கி.மீ.வேகத்தில் சுற்றுகிறது.இவ்வளவு அதிக வேகமாக சுழன்றாலும் எதுவுமே தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்வதில்லை.ஆகையால் புவிஈர்ப்பு விசை என்ற அன்பில்  அனைத்துமே தனக்கென்ற நிச்சயக்கப்பட்ட தொலைவை அமைத்தே இணைந்துள்ளன.
 
அதனால் அன்பு உலகி்ல் மகத்துவம் நிறைந்த அங்கமாகும்.கபீர் இந்த ஈரடி மூலம் நம் சொற்களில் அன்பைக்கலந்து பாருங்கள்.நல்ல எதிர்மறைப் பலன்களைக் காண்பீர்கள்.இனிமையான சொற்கள் பேசுபவர்கள் அனைவரின் உள்ளங்களிலும் ஆட்சிசெய்வர். அவர்களின் புகழ் காலத்தை வென்று  நிலைத்து நிற்கும் என்று கபீ்ர் எச்சரிக்கிறார்.நிந்திக்கும் தவறை யாரும் ஒருவரும் செய்யக் கூடாது.
எவருடைய  நிந்திக்கும் கடும்  சொற்களையும் கேட்கக் கூடாது. அறியாமையின் காரணங்களால் தான் தார்மீக மதிப்புகள் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன. இரண்டாம் நிலை/ மூன்றாம் நிலை நிந்தனைகள் உச்சநிலை அடைந்து எந்த ஒரு களத்திலும் தடை கற்களாக அமைந்துவிடும். நிந்தனைகள் எதிர்மறையை நோக்கி மனிதனை எடுத்துச் செல்கிறது.அதற்குப் பிறகு ஈர்ப்புக் கோடபாடுகள் செயல் புரிந்து  எதிர்மறையில் இருந்த மனிதன் மனதில் எதி்ர் மறை எண்ணங்கள் உள்ளவனாக மாற்றிவிடுகிறது. இதனுடைய நேர்விளைவுகள் அந்த மனிதனின் அல்லது நிறுவனத்தின் மதிப்பான நோக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நம் நாடு ,உலகம் ,பிராணிகள் மட்டும் நலமாகஇருக்க வேண்டும் என்றே  கபீர் கூறுகிறார்.



-(4)-
கால் கரே ஸோ ஆஜ் கர்,ஆஐ் கரே ஸோ அப் |
பல் மே ப்ரளய ஹோஏகி ,பஹுரி கரேகா ஆப்..

 மனிதன்  தன் சோம்பேறித்தனத்தால்  உடனே வெற்றி பெறும் பணியில் ஈடுபடாமல் தாமதப்படுத்துகிறான். இ்ந்த ஈரடியில் கபீர் இப்படிப்பட்ட சோம்பேறிகளைக் கடுமையாகத்  தாக்குகிறார்.எழுந்திரு.சுறுசுறுப்பாக இரு. நாளை நடப்பதை யாரறிவார்கள்?நாளை செய்யும் வேளையை இப்பொழுதே செய்யுங்கள். கோள்களின் நிலைகளால் ஆபத்துவரலாம்.நினைத்த காரியம் நினைத்ததாகவே இருக்கக்கூடாது.
புதிய பிரச்சனைகள் வரலாம்.மனதில் உள்ள வேதனையால் நேர்மறை எண்ணங்களின் கடலால் சூழ்ந்திருக்கலாம்.எண்ணங்களின் படியே வழ்க்கை .ஆகையால் நல்ல   எதிர்மறை காரியங்களை உடனே நிறைவேற்றுவதில் தயங்கக் கூடாது.எவ்விதத் தயக்கமும் இ்ன்றி உடனே ஈடுபடவேண்டும்.



                              (5)
நிந்தக் நியரே ராக்கிஏ  ஆங்கன் குடிர் சமாய் .
பி்ன் பானி ,ஸாபுன் பினா ,நிர்மல் கரே சுபாய்..

உங்கள் மீது குறைகறுபவர்களை  உங்கள் விமர்சகர்களைப் பற்றி
இந்த ஈரடியி்ல் கபீர் கூறுகிறார். இன்றைய நிகழ்கால யுகத்தில் ஒருவரும் தன்னை நிந்திப்பவர்களையோ ,விமர்சி்ப்பவர்களையோ விரும்புவதில்லை. இப்படி ஆற்றலுள்ள விமரசகர்களைத் தன் வழியில் இருந்து அகற்ற மிகவும் முயல்கிறார்கள். எப்படியாவது தன்னைத்திட்டுபவர்களை விமர்சிப்பவர்களை விலக்கினாலும் அமைதி இருக்காது.பலவழிகளில் கஷ்டங்கள் வரும். கடவுள் படைத்த படைப்புகளில் விபரீதங்களும் நடக்கின்றன. அதனால் உண்மை எது?பொய் எது?சரி எது?தவறு எது? என்று மதிப்பிட முடியாது.ஒரு
மக்களாட்சி நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பலமிக்க எதிரியாக நிற்கின்றனர்.அவர்களுக்கு அரசியல் சாசனப்படி உரிமை உள்ளது.சுயநலமான அல்லது நீதி்க்குப் புறம்பான தீர்மானம்  நிறைவேற்றினால்  எதிர்க்க முடியும்.பொது இடத்தில் அமைதியாக
எதிர்ப்பைக் காட்டி சத்தியம் அசத்தியத்தின்  வேறு பாட்டைக் காட்டி வி்ளக்கம் அளி்க்கமுடியும். எதிர்க்கட்சியின்  எதி்ர்ப்பு, விமர்சனங்களின் அச்சத்தால் ஆளும்கட்சியினர் சுயநலமற்ற எல்லோருக்கும் நலம்,சுகம் அளிக்கும் முடிவையே எடுக்கின்றனர். ஆளும் கட்சியினர் வலிமையுள்ள ஆட்சியாளர்கள் ஆகிவிட்டால் தலையில் ஏறி தாண்டவம் ஆடுவர்.நீண்டகாலம் வரை சூழ்நிலைகளைத் தனக்கு  சாதகமாக்கி எல்லாவித வித்தைகளைப் பயன்படுத்தி  தகுதியான தகுதியற்ற முறையில்  எதிர்க்கட்சிகளை அடக்கி விட்டால் தலைமை ஏற்றவர் சமுதாய முன்னேற்றம் செய்யவில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.
அவன் தன் குடும்பத்தை வலிமைப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறான். எந்த ஒரு வலிமை மிக்க சூழலும் நீண்டகாலம் வரை இளமையாக இருக்க முடியாது. கால மாற்றத்தால் பழமையாகி விடும்.பிறகு முடிவு நிச்சயம்.
200 ஆண்டுகள் வலிமை மிக்க அடக்குமுறை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களும்  தடி-பிரம்புகளுக்கு முன்னால் அதி நவீன துப்பாக்கிகளைச் சுருட்டிக் கொண்டு ஏழு கடல் தாண்டி ஓடிவிட்டனர்.நாடு அவர்களின் சுயநல கொள்கைகளில் இருந்து விடுதலை அடைந்தது. இவ்வாறான  சூழலில் மக்களுக்கு முன்பே எச்சரி்த்து கவனத்துடன் இருக்கச் செய்வது அவசியம். ஏனென்றால் மக்களின் கருத்துக்களில் மாறுகின்ற ஆற்றல்  மறைந்திருக்கிறது.அதை நல்ல விதத்தில் பயன் படுத்தும் புரிதல் வேண்டும்.கபீர் அவர்களின் ஈரடிகளின் நல்ல குணங்களை கற்பதால் தூண்டுதல் கிடைக்கும்.
  கபீரின் கூற்றுப்படி நம்மை நிந்திப்பவர்கள்,விமர்சகர்கள் எதிர்கட்சியினர்,எதிரிகள் நமக்குத் தூண்டுதல் அளிப்பவர்கள். வளம் நலம் தருபவர்கள்.நாம் நேர்மறைஎண்ணங்களுடன் அணுகுமுறையால் மதிப்பீட்டால் சுயநலமும் மக்கள் நலமும் அதில் அடங்கியிருக்கின்றது.
இவர்களை நாம் அருகில் வைத்திருப்பதல் இவர்களுடைய விமர்சனங்களைக் கேட்டு சாத்வீக எண்ணங்களல் மனிதர்களுக்குள் இருக்கும் தீய முறைகள்,அடக்கும் சக்திகள்,வளர்வதில்லை .சமுதாயம் ஒரு நல்ல காட்சியால் அழகாகிறது. கபீரின் அறிவுறைகளால் பரிசுத்தம்,களங்ககமற்ற ஆளுமை நிர்மாணிப்பதில் மனிதன் சாமார்த்தியமாகிறான்.இவை நவீன பாரதம் நிர்மாணிப்பதில் மகத்துவம் நிறைந்த பங்களிப்பாகும்.



                   (6)
ஜின் க்கோஜா தின் பாஇயா ,கஹ்ரே பானி பைட்.
மை ப்புரா டூபன் டரா, ரஹா கினாரே பைட்.

முன்னோர்கள் சம்பாதித்த செல்வம்,பரம்பரை செல்வத்தின் ஆணவத்தால் மகிழும் வையக மக்களைப் பார்த்து கபீர் இந்த ஈரடியை எழுதியுள்ளார். வீரத்துடன் அச்சமின்றி ஆழ்கடலில் மூழ்கினால் முத்து கிடைக்கும். உழைப்பிற்கேற்ற தவத்திற்கேற்ப பலன் தொடர்புடையதாக இருக்கும். வீரத்தைக் காட்டாமல் பயத்தின் காரணமாக கரையில் உட்கார்ந்து  உபன்யாசம்  செய்தால் பசும்புல் தான் கிடைக்கும். இந்த நில உலகில் பேரும் புகழும் பெறுபவர்கள் கடினமான  வழியில் சென்று குறிக்கோள்களை அடைந்திருக்கின்றனர். வழியில் பயங்கர அடர்ந்த இருள் சூழ்திருந்தாலும்  தன் நம்பிக்கையோடும் நேர்மறை எண்ணத்தோடும் முன்னேறும் ஆசையும் விருப்பமும்  போதமான அளவு இருந்தால்  இயற்கை தானே வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்யும்.இந்த வழியில் சென்றவர்களுக்கு  இதன் ரகசியத்தை அறிவார்கள். இதற்கு சாட்சிகளும் இருக்கின்றன.அவர்களிடமும் கேட்கமுடியும்.
 
ஒரு செயலை செயல் படுத்த தன் திறனின் மீது நம்பிக்கையின்றி குறுக்கு வழியில் மற்றொரு வழக்கறிஞர்மூலம் பரிந்துரை சிலர் சரியானதென அறிகிறார்கள்.இந்த சந்தர்பத்தில் தனித்து வென்றவர்கள்  பொதுவான வெற்றி பெற்றவர்கள் பற்றி அறிந்து கொள்வது பொருத்தமானதாகும்.

ஒரு கிராமத்திலோ,நகரத்திலோ, பட்டிணத்திலோ வசிக்கின்ற பொதுமக்களில் ஒருவன் உயர்ந்தவனாக,வழக்கறிஞனாக,தரகராக,
அறிவில் தனிச் சிறப்படையவனாக  விளங்குகிறான். அந்த முழு பகுதிகளிலும் அவன் உயர்ந்தவனாகப் பேசப்படுகிறான். குறிப்பிட்டவன்  உயர்ந்த மனிதன்.அவனால் செய்ய முடியாத காரியம் என்பதே இல்லை. அவனுக்குப் பெரிய பெயர்.பெரும் புகழ். இதைக் கேட்டு தேவைப் படுபவர்கள் அவன் வீட்டைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். பாரதம் முழுவதும் இப்படிப்பட்ட காட்சிகள் பார்க்க முடிகிறது.
உயர்ந்தவர்கள்,தரகர்கள் சாமார்த்தியம் இரண்டு விதமாக இருக்கும்—ஒருன் தனிப்பட்ட பரிந்துரை செய்பவன்,மற்றவன் பொதுமக்களுக்காக  பலநோக்கு நன்மைக்காக பரிந்துரை செய்பவன்.
ஒரு மனிதன் தன் சிறப்புத் திறனால் அல்லது செயலாற்றும் சாமார்த்தியத்தால் பொது மக்களிடம் சிறந்த உயர்ந்த மனிதனாக பெயர் பெற்று விளங்குவான். அவன் புகழ் அவன் சமுதாயத்தில் நாட்டில் மாநிலத்தில் புகழ் அடைந்து  உள்ளூர் பிரமுகரகளுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. ஒருவர் மற்றவருடன் உள்ள சம்பத்தத்தைப் பார்த்து
அவனுக்குக் கீழ் உள்ளவர்கள் அந்த மனிதனை இடைத்தரகராக அறிந்துகொள்கிறார். தொடர்பின் ஆழம் நெருக்கத்தின் பாலம் இதற்கு மூலாதாரம் என்ன என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஏதோ ஒரு நன்றியுள்ளவன்,அல்லது  நம்பிக்கையின் சரத்தால் கட்டப்பட்ட புதிர்,அல்லது ஏதோ ஒரு தேவை ,ஒரு குறிக்கோள்,பெரும் குறி்க்கோள் அல்லது நட்பில் சுயநலமில்லா ஒத்துழைப்புணர்வு  ஏதோ ஒன்று கட்டாயமாக இந்தத்  தொடர்பி்ன்  ஆதாரத்தை உறுதிப்படுத்துகிறது.
  சிலதனிப்பட்ட உயர்ந்தவர்கள்,தன் உயர்நிலையை சரியாகப் பயன்படுத்தி தன் வேலையை சாதிப்பதில் நிபுணர்களாகின்றனர்.தன் முன்னால் அடைந்த உயர்நிலையைப் பயன்படு்த்தி எப்படியாவது தன் நலத்திற்கான லாபம் பெறும் காரியத்தைச் செய்து முடிப்பதில் வெற்றி
பெறுகின்றனர்.அவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அறிந்தவர்களுக்கும் அவரின் சாமார்த்தியம் தெரிவதால் தரகு பற்றி அறிந்து கொள்கிறார்கள்.பின்னர் தன் காரியங்களைச்  செய்து முடித்துத் தருமாறு வற்புறுத்துகின்றனர். அடுத்தவனும் அதை ஆமோதிக்கிறான்.இவ்வளவு புகழ் பெற்ற பிறகு அவரிடம் பரிந்துரைக்கு வருபவரின் வேலையை முடிக்கவில்லை என்றால் பெயர் கெட்டுவிடும் என்பதால் கட்டாயமாகசெய்ய வேண்டிய நிலைற்படுகிறது.
இந்த மனிதன் சுயநலக்காரன்.தன்னை முட்டாள் ஆக்குகிறான்.ஆகையால் அவனின் வற்புறுத்தலுக்கு சரி என்கிறான்.
சம்பந்தப்பட்ட வேலையை செய்ய முடியாமல் செய்கிறேன் என்றுஉறுதியளித்துக்கொண்டே இருப்பான். மிகவும் கஷ்டப்பட்டு தனியான உயர் நிலை அடைந்துள்ளான்.அவன்அனேகம் பேருக்கு பரிந்துரை செய்துகொண்டே இருந்தால் அவன் பெயருக்கு களங்கம் ஏற்படும். அடுத்த தரகர் அறிந்துவிட்டால் என்ற எண்ணத்தால் பரிந்துரை செய்யமாட்டான். சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டே இருப்பான்.
அவன் மற்றவர்கள் மீது தன் மேல் உள்ள நம்பிக்கையை யூகித்து அறியமாட்டான்.  இறுதியில் அவனால் முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.அவர்கள் வேறு வழியில் செல்வார்கள்.
  சில சமயங்களில் தனித்து புகழ்பெற்றவர்கள் தன் பணிக்கே தனக்காக பரிந்துரை செய்யமுடியாது. நான் உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்.இதை சரியான நேரத்தில் பயன்படுத்துவேன்.இப்பொழுது பயன் படுத்தினால் எதிராளிகள் என்னை பேரசைக்காரன் சுயநலம் உள்ள மனிதன் என்றே நினைப்பார்கள்.அவன் தன்னைப் பற்றியே நினைப்பதால் அவன் இடைத் தரகனாக பரிந்துரை செய்யமாட்டான். இதற்குள் காலம் கடந்து விடும். அதனால் தான் கபீர் சொல்கிறார்—
நாளை செய்வதை இன்றே செய்,இன்று செய்வதை இப்பொழுதே செய்
நொடியில் பிரளயம் வந்து விடும்,அப்போது முடிவு வந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? அதாவது நல்ல உண்மையான காரியம் செய்யவேண்டும் என்றால் உடனே செய்து விடு.நாளை என்பதை  யாரும் பார்த்த்தில்லை.நாளை சூழ்நிலை மாறலாம் என்பது யாருக்குத்தெரியும் ?இன்று வேலைநடக்காவிட்டால் நாளை ஏதாவது தடை ஏற்படலாம். உயர்ந்த மனிதனின்தொடர்பு போல்அதில் பிளவுகள் ஏற்படலாம்.மனதில் ஏதாவது எண்ணங்கள் வந்தால் எதிரில் உள்ளவர்களுக்கு சொல்வதில் தான் புத்திசாலித்தனம் உள்ளது. அவன் நம் விருப்பத்தை நடை முறைப் படுத்தினாலும் படுத்தவில்லை எண்றாலும் மனிதனின் ஆளுமை குறைவதில்லை.
எதிரில் உள்ளவர்களிடம் சிறிதளவு ஆதரவும்,சொன்னதற்கு மரியாதையும் சற்றே இருந்தால் அவன் கட்டாயமாக உதவியும் ஒத்துழைப்பும்செய்வான்.அல்லது அவன்  மறந்திருந்தாலோ
தவறு செய்திருந்தாலோ சொன்னதை எண்ணாமல் இருந்திருந்தாலோஅவனைப் பின் தொடர்ந்து செல்வதாலோ, அவனுக்குப் பி்ன்னால் நேரத்தை வீணாக்குவதிலோ எவ்விதப்பயனும் இல்லை. உலகம் வேற்றுமைகள் நிறைந்தது.இங்கு ஒருவரைவிட ஒருவர் பெரியவர்கள். அவர்களில் சிலர் இரக்க முள்ளவர்கள். ஒத்துழைப்பவர்கள்.தானாகவோ அல்லது அல்லது அவருக்குத் தெரிந்தவர்கள் மூலமோஉயர்ந்த மனிதர்களின் தரகர் மூலம் அடைவதில் வெற்றி பெற்றால் கட்டாயம் வேலை முடிந்துவிடும்.இருள் மிக்க வழியாக இருந்தாலும் தன்னம்பிக்கை உற்சாகம் இருந்தால் சத்தியமார்கத்தில் செல்கின்ற  இயற்கை குணம் தானாகவேவெளிச்சத்தைஏற்படுத்தும் மேலும் ஒளிமயமான வழியைக்காட்டும்.

அடுத்த பொது நலத்தில்  உயர்ந்த மனிதர்களுக்கு கடவுளின் அருள் மழை பொழிகிறது.அவர்களுக்குள் அசாதாரமான மேதை திறமை மற்றும் மக்கள் நல சிந்தனை,மக்கள் நலப் பணி செய்வதில் சாமார்த்தியம்,ஆற்றல் மேலும் முன்னால் அவர்கள் செய்த மக்கள் நலப்பணிகளுக்காக மக்களின் வாழ்த்துக்கள் என்ற விலைமதிக்க முடியாத சக்தி நிறைந்தே இருக்கிறது.அவர்களின் உயர்நிலை,ஆனம பலம்,ஆண்மை.வீரம், உற்சாகநிலை உயர்கிறது.அவருடைய ஒளி அவரை பொதுநல சேவை மதிப்பு மக்களின் தரகராக தலைவராக உயர்த்துகிறது.
அவருக்கு யாருடனும்  முன் தொடர்பு இல்லை என்றாலும் எவ்வித ஆதரவு இல்லை என்றாலும் உயர்ந்த ஆசைகள் இல்லை என்றாலும் இதற்கு எவ்வித பொருளும் கருதமாட்டாரகள். மக்களின் நலனிற்காக தனிப்பட்ட சமுதாய நன்மைக்காக பரிந்துரை செய்தால்  எதிரில் உள்ளவர்கள் கட்டாயமாக பரிந்துரையை ஏற்பார்கள். சிபாரிசை ஏற்பவர்கள் மிகவும் தீவீரமாக ஏற்று அதன் படி முன் நடவடிக்கை எடுத்தாலும்  கண்டுகொள்ளாமல் இருந்தாலும் பொது நலத்தொண்டில் உயர்ந்த பெயர் பெற்ற மனிதனின் மரியாதை- கௌரவத்தில் எவ்வித வேறுபாடும் ஏற்படாது.அவன் தன் பணியைச் செய்து கவலையற்றவனாகிவிட்டான்.அவனுக்கு ஆரம்ப மன நிறைவு மகிழ்ச்சி கிடைத்துவிட்டது.அவன்எதிர் மறையை எதிர் கொண்டாலும் நிராசையடையாமல் மற்றொரு மாற்று யோசனை செய்வான்.

  பொது மக்களின் நலத் திட்டங்களால் புகழ் பெற்ற ஒருவன் தன் சாமர்த்தியத்தால் தவறாகத் தன்சுயநலத்திற்காக தன் புகழைப் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நிழ்காலத்தில் தூய அரசியல் அமைப்பு அரசியலில் களங்கமுள்ள அரசியலைப் பார்க்கிறோம். மக்கள் கூட்டம் ஒரு கட்சியையோ அல்லது கட்சியின்
மனிதையோ நம்பித் தன் தலைவனாகத் தேர்ந்தெடுக்கிறது. பிறகு அந்தத் தலைவன் தன் தனிப்பட்ட சுயலத்திற்காக நீண்டகாலம் வரை எதிர்கால பாதுகாப்பிற்காக நடுவில் தென்படும் கட்சி அல்லது கவனிக்கப்படும் கட்சிக்கு மாறிவிடுகின்றனர்.யாருடைய ஓட்டுக்களைப்
பெற்று பதவி பெற்றார்களோ அவர்கள் சம்மதம் இன்றி கட்சிமாறுவதுஎப்படி என்று பல எடுத்துக்காட்டுகள்  தர்க்கங்கள் உள்ளன.தனிப்பட்ட விருப்பத்திற்காக சரி,தவறு என்ற
முடிவுகள் எடுக்கும் முன் மக்களின் கருத்து அறியப்பட்டதா?குடியாட்சி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்க்பட்ட  அரசு பிரதிநிதிதன்னிச்சையான முடிவு எடுக்கும் முன் மக்களின்பங்கு வேண்டாமா?குறிப்பிட்டகாலகெடுவிற்கு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் தங்கள் நலம் பற்றி கேள்வி  கேட்டு பதில் பெறமுடியாதா?வாக்களிக்க மட்டும் குடிமக்களா?
அரசியல் அமைப்பு நிர்ணயச் சட்டம் மக்களுக்கு உரிமைகள் கொடுத்துள்ளது.அதன் படி மக்கள் தங்கள் கோரிக்கைகளை அமைதியான மரியதையான முறையில் சரியாக அரசுமுன் வைக்க முடியும். ஆனால் அவர்களின் அமைதியான கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்றால் மக்கள் பெரும் கூட்டமாக மாறி ஹிம்சைப் புரட்சிகளில் இறங்கிவிடுகின்றனர்.இது ஆரோக்கியமான குடியாட்சியின் கருத்தாக்கம் கிடையாது. இதல் திருத்தம் அவசியமாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட மனிதனோ கட்சியோ தன் தனிப்பட்ட லாபத்திற்காக எதிர்கால பாதுகாப்பிற்கான

கவலையில்ஈடுபட்டிருந்தால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை போய்விடும். அவர்கள் முழுமையாக பிரகாசிக்க முடியாது. கட்சி மாறிகள் என்ற பெயர் பெற்று விட்டதால் சென்ற இடம் எல்லாம் வலிமை குன்றி காணப்படுவர்.அவர்களுக்கு அவரகள்  எதிரகாலம்பற்றிய கவலையேதுன்புறுத்துகிறது.அதனால் நிழ்காலத்தை இழந்துகோண்டே இருக்கிறார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தி பதுநலத் தொண்டில் உயர்ந்து புகழ் பெற்றவர். அவர் சொல்லும் விசயத்தை எதிர்த்து வெட்டிப்பேசும் தைரியம் ஓருவருக்கும் இருந்தது  இல்லை. ஆங்கிலேயருக்கும்இல்லை இந்தியர்களுக்கும் இல்லை.அவர் சமுதாய பொது ஜன நலத் தொண்டில் மிகவும் உயர்ந்தவர்.முன்னணித்தலைவர்.
ஒரு சாதரண மனிதனை நம்புவதற்கு முன் அவன் தனிமனிதனா பொது மனிதனா என்று சோதித்து  அவன் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். இல்லையென்றால் பின்னர் அவ நம்பிக்கையும் வருத்தமும் தான் மிஞ்சுகிறது.ஒவ்வொரு மனிதனும் சிறிதளவாவது பயன் தரக்கூடியவன் தான். அதனால் யாரிடமும் விரோதம் வைக்காமல் அன்புடன் வாழ்க்கையை ஆனந்தமாக  அனுபவிப்பதி்ல் தான் புத்தசாலித்தனம் உள்ளது. தன்னைவிட தனக்குத்  தரகர்வேறுயாரும் இருக்க முடியாது.மற்றவர்களை எதிர்பார்ப்பதை விட தானே தன் நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணத்துடன் நம்பணியைச் செய்யப் புறப்பட்டால் இயற்கை உதவி செய்ய தயாராக நின்றுகொண்டிருக்கிறது.


                 -------(7)-----
தீரே தீரோ ரே மனா .தீரே சப் குச் ஹோய்.
மாலி ஸீஞ்சை ஸௌ கடா,ருது ஆஏ ஃபல் ஹோய்.

சற்குரு கபீரின் இந்த ஈரடி நிகழ்கால யுகத்தில் மிகவும் ஆன்மீகமானது.ஆன்மீகத்தை மதிக்காத ஏமாற்றும் கலியுகத்தில் மனிதர்களுக்கு தைரியமும் மனநிறைவும் கிடையாது. அனைத்தையும் உடனடியாக பெறவிரும்புகின்றனர். ஆனால் இறைவன் படைத்த படைப்பில் அனைத்துமே காலநி்ர்ணயம் செய்யப்பட்ட செயல் திட்டங்கள் தான். தோட்டக்காரன்  பழம் தரும் மரத்தில் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் நிச்சயிக்கப்பட்ட பருவகாலம் வரும்போதுதான் பழம் பழுக்கும்  என்று கபீர் கூறகிறார். தைரியமும் திருப்தியும் இல்லாத மனிதன் ஆக்ஸிடோசன் என்ற விஷமுள்ள ரசாயனத்தை வளர்த்துள்ளனர்.
இந்த ரசாயனத்தை பழம்,காய்கறிகளில் ஊசி மூலம் செலுத்தினால் ஒரு இரவிலேயே பழம்,காய்கறிகள் பெரியதாகி வாணிகத்திற்குப் பயன் படுத்துவதற்குத் தயாராகிவிடுகின்றன. அதே  மருந்து ஊசி மூலம்  மிருகங்களுக்கும் கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப் படுகிறது.  அதனால் உற்பத்தி எதிர்பார்ப்பை விடஅதிகமாகிறது. ஆனால் உடல் ஆரோக்கியத்தைப்  பாதிக்கிறது.இப்படிப்பட்ட இரசாயனங்கள் மனிதர்களை  நோயால் பாதிக்கப்பட்டவராக நோய்களுக்குக் காரணியாக மாறிவிடுகின்றன. இப்படிப்பட்ட பிரயோகம் இயற்கையின் நியதிக்கு எதிரானதும் கூட.இதனால் ஏற்படுகின்ற  தீய தாக்கங்களால் பொருளதாரம் ,சமுதாயம் மற்றும் புத்தி ஆகியவையும் பாதிக்கப்படுகிறது. கபீரின் இந்த ஈரடி இன்றைய யுகத்தின் நிகழ்வாகிறது. மனமே, தைரியமாகவும், திருப்தியாகவும்  தக்கசமயத்தை எதி்ர்பார்க்கக் கற்றுக்கொள். அதிக லாபத்திற்காக ,வணிக லாப சம்பாதிப்பதற்காக  இயற்கையின் நியமங்களை கண்டகொள்ளாமல் இருக்காதே.இயற்கையின் படைப்புகளை தீயவழியில் பயனபடுத்தாதே.இப்படிச் செய்தால் இ்யற்கையின் சமநிலை கெட்டுவிடும்.அதன் விளைவை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும்.



                                  ( 08)
மன் கே ஹாரே ஹார் ஹை,மன் கே ஜீதே  ஜீத்.
கஹே கபீர் ஹரி பாயியே ,மன் ஹீ கீ பரதீத்.
சற்குரு கபீரின்  இந்த ஈரடி மிகவும் ஆன்மீக செய்தி தருகிறது. உண்மையில் மனதின் ஆற்றலை அறிந்தவன் உலகத்தை வெற்றிகொள்ள முடியும். எதை,எப்படி விரும்பு கிறானோ,அதை அப்படியே பெறமுடியும். அவனுக்கு இயற்கையே  உதவி செய்யும்.
  உடலில் மனம் சேனாதிபதி போன்றது. சிப்பாயிகள் போன்றவை மற்ற புலனகள்.(இந்திரியங்கள்).அறிவு பிரதமர்.ஆன்மா மேதகு மாட்சிமை பொருந்திய குடியரசுத் தலைவர் .சத்தியம் -அசத்தியம் என்ற திராசில் மனம் விரும்பினால் தன் திறமையால் ஆற்றலால் புத்தியையும் ஆன்மாவையையும் ஏமாற்ற முடியும் .மனம் தன் விருப்பப்படி  அறிவையும் ஆன்மாவையும் கட்டாயப்படுத்த முடியும்.
    சத்தியம் கட்டாயம் குழப்பம் அடையமுடியும். ஆனால் இறுதி வெற்றி சத்தியத்திற்குத் தான்.ஆனால்  அசத்தியம் தான் ஆரம்ப நிலையில் வெற்றியைத் தரும்.
ஆனால் இறுதியில் வெறுப்பு ,நிந்தனை,தோல்வி என்ற கயிற்றால் கட்டப்படுகிறது.
மனம் சத்தியம் ,அறம்,என்ற வழியில் உறுதியாக இருந்து எதிர்மறை சக்திகள் அவனை  பாதிக்க  முடிய வில்லை  என்றால் அவன் வெற்றியின் இனிமையை ரசித்து ருசிக்க முடியும்.அவனை யாரும் தடுக்க முடியும். ஏனென்றால் இதுதான் அடிப்படை நியமம் இயற்கை தன் நியமத்தை உடைக்க விடாது. மனிதனின் யோசனையும் மன வலிமையும் எப்படியோ அப்படியே அவனின் அக்கம் பக்கத்தில் படைப்புகள் உண்டாகும்.அதன் படியே முடிவுகளும் ஏற்படும். மனதில் உறுதியாகவும் சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சி அதர்ம வழியில் முடிவெடுக்காதவனும் ,மனநிறைவுடனும்   தைரியமாகவும் அறவழியில் முன்னேறுபவன் ஆனந்த மார்கத்தில்  சென்று வெற்றியின் ருசியை கட்டாயம் ருசிப்பான். அவன் உண்மையான சுகத்தை உணர்வான்.ஒருவன் மனதில் காமம்.குரோதம்,ஆணவம், மோகம், பேராசை,அஹங்காரம், பொறாமை,வெறுப்பு,வஞ்சகம்,கபடம், போன்ற நாசமளிக்கும் விரோதிகள் கூடாரம் போட்டுத் தங்கினால் அவன் மனதில் உள்ள சாத்வீக குணங்கள் மறைந்து 

ரஜோகுணம்,தமோகுணம் ஆகியவற்றின் தாக்கத்தால் அவன் மனதில் நல்ல குணங்கள் நிரந்தரமாக இருக்காது.நொடியில் கோபம்,நொடியில் திருப்தி,நொடியில்  உற்சாகம் பெரிய விறகில் மண் எண்ணெய் ஊற்றியது போல் குபுக் என்று பற்றி எரியும்,சிறிது நேரத்தில் சாந்தமாகிவிடும் உள்ளுணர்வுகளின் காரணமாக அவன் மனதை
தொடர்ந்து உறுதியாக நிரந்தர இயக்கமள்ளதாக வைத்துக்கொள்ள முடியாது.
நிரந்தர இயக்கம் படைப்பின்அடிப்படைக் கோட்பாடு.அதனால் தான் மனம் தோற்றால் தோல்வி,மனம் வென்றால் வெற்றி என்ற செய்தியை கபீர் மனிதர்களுக்கு கொடுத்துள்ளார்.ஒரு மனிதன் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தாலும் பணம் செழிப்புகள் இருந்தாலும் மனம் தோற்றுவிட்டால் அவன் வாழ்க்கையில் வெற்றி வஞ்சித்து விடும். செல்லாக்காசு கூட  இல்லாத மனிதனின் மனதில் உற்சாகம் ஆர்வ அலைகள் எழுகி்ன்றன.அந்த மனிதன் அலெக்ஸாண்டர் போன்று உலகம் முழுவதையும் தன் வசப்படுத்த முடியும்.



                                  (09)
மாடி கஹே கும்ஹார் ஸே ,தூ க்யா ரோந்தே மோய்.
ஏக் தின் ஐஸா ஆஏகா,மை ரௌந்தூங்கி தோய்..
சற்குரு கபீர்  இந்த ஈரடியில் மனிதனின் வினைப் பலனின் உறுதியான கோட்பாடை
முன்னிலைப் படுத்தியிருக்இறார்.மனிதன் ஏதாவது ஓரு வினை செய்யாமல் ஒரு நொடி கூட இருப்பதில்லை.ஒவ்வோரு நொடியும் மனிதன் ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.செய்பவனின் நோக்கில் வினைகள் மூன்று விதமாகத்தான் இருக்கின்றன. முதலாவது நற்செயல்கள்,புண்ணியவினைகள்.பாப வினைகள்,மூன்றாவது பாவமும் புண்ணியமும் இல்லாத வினைகள்.இந்த மூன்று வினைகளி்ல் மனித வாழ்க்கை சுற்றப் பட்டிருக்கிறது. சுகமும் செழிப்பும்,செல்வமுடமையும் ஏழ்மையும்,ஒவ்வொரு மனிதனின் வினைப்பயனாகும்.
சிலருக்குத் தினந்தோறும் சாப்பாட்டிற்காக உழைப்பது அவசியமாகிறது.இது மனிதனின் வினையின்  பிரதிபலனின் பலனாகும்.ஒருவனும் வெறுங்கையால் வருவதும் இல்லை. போவதும் இல்லை. இந்த மரண உலகத்தில் அனைத்து ஜீவன்களும் வினைகளில் கட்டுண்டு  தான் வருகிறார்கள். வினைகளால் கட்டுண்டே போகிறார்கள்.
தான் வாழும் காலத்தில் முன்ஜன்ம கர்மத்தின் படி தான் சுக துக்கங்களைப் பெற்று  அனுபவிக்கிறார்கள். கபீர் இந்த ஈரடியின் மூலம் நம்வினைப்படி நமக்கு பதிலடி கிடைக்கும் எனகிறார்.குயவன் மண்ணை உதவியற்ற பலமற்றது என்று பிசைந்த  தன்  விருப்பப்படி உருவம் அளித்து நெருப்பிலிட்டு  பாத்திர உருவம் அளிக்கிறான். அதே குயவன் இறந்தபின் அவன் உடல் மண்ணில் புதைக்கப்படுகிறது.அப்பொழது மண் அவனைப் பிசைந்து மண்ணோடு மண்ஆக்கி விடுகிறது. மனித உடல் கிடைத்துவிட்டது என்பதற்காக பலமற்ற பிராணிகளை துன்புறுத்தக் கூடாது .