Friday, June 23, 2017

யோகா கலையா மதமா ? ( ச )




  • t



    1. யோகா கலையா ? மதமா ?
      முகலாயர் அமர்ந்து தொழுகை
      செய்வது தான் வஜ்ராசனப் பயிற்சி.
      மண்டியிட்டு அமர்ந்து நெற்றி பூமியில் பட .
      ஐந்து நேரம் தொழுகை செய்யும்
      மகமதிய சகோதரர்கள் நெற்றியில்
       கருப்பு தழும்பு இருக்கும்.
      கிறிஸ்தவர்களும் மண்டியிட்டுத் தொழுவர். 
      இதெல்லாம் சேர்ந்த உடற்பயிற்சி
      இந்த மதங்கள் தோன்றுவதற்கு
      முன்பே இருந்ததுதான் சூரிய நமஸ்காரம்.
      சிந்தித்துப் பாருங்கள்.
      உண்மையை மறைப்பவர்கள் தான் மத தீவீரவாதிகள்.
      இந்துமதம் ஒளியை இறைவனாக ஏற்கிறது.
      உருவமற்ற இறைவனை ஏற்கிறது.
      உருவமுள்ள இறைவனைப் படத்ததது மனிதன்.
      அதுவே ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் திருவிளையாடல்
       இவைகளில் உண்மை இருந்தாலும்
      கற்பனைகள் அதிகம்.
      அதனால் தான் ராமாயணம் வேறுபடுகிறது.

      கம்பர். துளசி வால்மீகி மூன்றிலும் வேறுபாடு உள்ளது.
       மொழிபெயர்ப்பு நூல்கள்.
      சமுதாயத்தின் கண்ணாடி இலக்கியம்.
      இயற்கையை வர்ணிப்பது இலக்கியம்.
      இதில் முகமே சந்திரபிம்பம் என்பது கற்பனை.
      நிலவு இயற்கை . முகம் இயற்கை .
       இரண்டு உண்மைகள் ஒன்று
       சேர்ந்தால் கற்பனை.
      சாஷ்டாங்க நமஸ்காரம் கிண்டல் செய்யும் வீரமணி,
       வஜ்ராசனத்தில் நெற்றிப்படும்படி தொழுகை செய்வது ,
       கிறிஸ்தவர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது
      ஆகியவையும் மண் நோக்கிக்கிப் பாயும் நமஸ்காரங்கள் தான்.
      மதம் என்பது ஒழுக்கம் .

      ஹிந்து மதத்தில் ஒழுக்கம் கிடையாது.
      ஒற்றுமை கிடையாது.
      பலருக்கு ஏன் லக்ஷக்கண்க்கானவர்களின் பிழைப்பே
       ஆன்மீக ஏமாற்றங்களில் தான்.
      ஆலயம் சுற்றி கடைகள்.
      அதில் தரமில்லா பொருட்கள்.
      அதை அனுமத்திக்கும் அரசு
      ஆதரிக்கும் மக்கள்.
      மாவால் செய்த ருத்திராக்ஷம்
       பெரிய அளவில்
      விற்கப்படுகிறது.
      அதைத்தடுக்க   அரசு   இல்லை .
       படங்கள் , ஆயிரம் தலை விநாயகர்
      அவரை கடலில் வீசி அவமானம்.
      சிவனை வழிபாடும் ஆஷ்ரமங்கள்,
      வைணவ ஆஷ்ராமங்கள்.
      குங்குமம் கூட பச்சைநிறம் குபேரர்   கோவிலில்.
      இதற்கு எங்கு ஆதாரம் தெரியவில்லை.
      இறைவன் இருக்கிறான். ஆனால்
      அவனை வைத்து வாணிகம்தான்
      பலருக்கு ஜீவனம்.
      அதுவே ஆன்மீக ஊழல்.

      ஜோதிடம் சொல்பவர்
      வீட்டில் அஷ்ட தரித்திரம்.

      பிரபல ஜோதிடர் தற்கொலை.
      நாம் இறைவனை உணரவேண்டும்.
      இறைவன் நம்மைத்தேடி வரவேண்டும்.
      முகம்மது நபிக்கும் அப்படியே.
      ஆதி சங்கரருக்கும் அப்படியே.
      பக்த தியாகராஜன், துருவன் பிரஹ்லாதன்
      அனைவருக்கும் அப்படியே. வால்மீகிக்கும் அப்படியே.

    No comments:

    Post a Comment