Wednesday, December 13, 2023

மாயை

 மாயை உலகத்திற்கு இன்னலைத் தரும்.

ஞானத்தை இழக்கச் செய்யும்.

 ஏரிகளை மூடி கட்டிடங்கள் கல்லூரிகள்

 தொழில்நுட்ப அலுவலகங்கள் கட்டத் தூண்டும் மாயையான பணம் மதியை இழக்கச் செய்யும்.

 ஒரு வீடு இருந்த இடத்தில் முன்னூறு வீடுகள். விண்ணைத் தொடும் அடுக்கு மாடி வீடுகள்.

நகர விஸ்தரிப்பு.

 விளைநிலங்கள் காணாமல் கட்டிடங்கள்.

 இன்று வெள்ளம் மட்டுமே.

 நாளை விளைநிலங்களற்ற 

நாடு. நெற்களஞ்சியம் என்று புகழ்பெற்ற பாரத மாநிலம் தமிழ்நாடு

உணவுக்கும் துடிக்கும்.

 இன்று லஞ்சம் வாங்கி கட்டிட அனுமதி கண்டபடி கொடுத்த அதிகாரிகளின் வாரிசுகள்

 பசியால் துடிக்கும்.

 மணல் கொள்ளை  வறட்சி.

 கட்டிடங்கள் இருக்கும். 

ஆனால் நிம்மதி இருக்காது.

 மாதா பிதா ஆட்சியாளர்கள் செய்த தவறு   மக்களை பாதிக்கும்.

 ஆண்டவனின் நிலைத்த சட்டம் பிணி ஏழ்மை முதுமை நரகவேதனை படுத்த படுக்கை அனைத்தும் இருக்கும்.

ஞானம் இருந்தும் மனிதன் உடனடி சுகம்தான் பெரிதென்று ஞான சூனியன் ஆவான். 2000 கோடி சொத்து இருந்தாலும்  முதுமை இளமை ஆகாது.

சே. அனந்த கிருஷ்ணன் சென்னை.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி.

செய்த பாவ புண்ணியங்களுக்கு பரிசும்  தண்டனையும் பூலோகத்தில் தான்.

 சுவர்க்கம் நரகம் வேறு எங்கும் கிடையாது.

No comments:

Post a Comment