தந்தைதாய் பேண்---माता -पिता की सेवा करो.
நன்றி மறவேல்.-- कृतज्ञता मत भूलो. ऋण चुकाओ .
பருவத்தே பயிர்செய்.---मौसम में खेती कर.
மன்றுபறித் துண்ணேல்---न्यायाधीश पद पर बैठकर |
फरियादियों से घूस लेकर मत जीओ.
இயல்பலாதன செயேல்.---धर्म ग्रन्थ के विरुद्ध कर्म मत करो.
அரவ மாட்டேல்.---विषैली जंतुओं से मत खेलो.
அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - நீ பிடித்து ஆட்;டாதே. 25
இलவம்பஞ்சிற் றுயில்---- सेमर के बिस्तर पर सोओ.
இலவம் பஞ்சில் - இலசம் பஞ்சு மெத்தையில், துயில் நீ நித்திரை கொள்
26
வஞ்சகம் பேசேல்----कपट की बातें मत कर.
வஞ்சகம் - கபடவார்த்தைகளை, பேசேல் - நீ பேசாதே. 27
அழகலா தனசெயேல்--- हीन कर्म किसी भी अवस्था में मत कर.
அழகு அலாதன - (நீ துன்பப்பட வந்த காலத்தும்) இழிவுள்ள செயல்களை, செயேல் - செய்யாதே.
அழகுடையவன உயர்வுள்ள செயல்கள், ஆதலால், அழகலாதென இழிவுள்ள செயல்கள் என்பதாம். 28
இளமையிற் கல்--- ब्रह्मचारी की अवस्था में ही शिक्षा सीखो .
இளமையில் - இளமைப் பிராயத்திலே, கல் - (நீ வித்தையை விரும்பிக்) கற்றுக்கொள். 29
அறனை மறவேல்.----धर्म मत भूलो.
அறனை - தருமத்தை, மறவேல் - (நீ ஒருபோதும்) மறவாதே. 30
அனந்த லாடேல்.--- कम निद्रा मत कर. (नशीली नशें मत सोओ)
அனந்தல் - நித்திரையை, ஆடேல் - (நீP அதிகமாகச் செய்யாதே. (அனந்தல் - கள் மயக்கமுமாம்.) 31
கடிவது மற.---- क्रोध की बोली भूलो.
கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - நீ மறந்துவிடு 32
காப்பது விரதம்-----सब की रक्षा करना ही व्रत है.
காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல்) அவைகளைக் காப்பாற்றுவதே, விரதம் - விரதமாம் 33
கிழமைப் படவாழ்---दूसरों के लिए जिओ .
கிழமைப்பட - (உன்னிடத்தில் உள்ள பொருள் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - நீ வாழு
34
கீழ்மை யகற்று.----निम्न गुण छोड़ो .
கீழ்மை - கீழ்மையாகிய குணத்தை, அகற்று - நீ நீக்கு, 35
குணமது கைவிடேல்.--सद्गुण मत छोड़ो
குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடல் - நீ விட்டுவிடாதே 36
கூடிப் பிரியேல் --सज्जनों की मित्र न छोड.
கூடி - (நல்லவரோடு சிநேகித்து, பிரியேல் - (நீ பின் அவரை விட்டு) நீங்காதே 37
கெடுப்ப தொழி---दूसरों की हानी करना छोड़ो
கெடுப்பது - (பிறருக்குக்) கேடு செய்வதை, ஒழி - நீ விட்டுவிடு 38
கேள்வி முயல்-- सदुपदेश सुनो .
கேள்வி - (கற்றவர் சொல்லும் நூற்பொருளைக்) கேட்பதற்கு, முயல் - நீ முயற்சி செய். 39
கைவினை கரவேல்.---कुटीर उद्योग -हस्त कला मत भूलो.
கைவினை - (உனக்குத் தெரிந்த ) கைத்தொழிலை, கரவேல், (மற்றவர்களுக்கு) ஒளியாதே.
40
கொள்ளை விரும்பேல்.---डाका डालना मत चाहो .(लालची से बचो )
கொள்ளை - (பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல் - நீ ஆசைப்படாதே
41
கோதாம் டொழி.----अपराध का खेल छोड़ो .
கோது - குற்றம் பொருந்திய, ஆட்டு - விளையாட்டை, ஒழி - நீ நீக்கு. 42
சக்கர நெறிநில்.--राजाज्ञा का पालन कर. (सरकारी आज्ञा का अनुकरण कर
சக்கர நெறி - (அரசனுடைய ஆஞ்ஞையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில் - நீ அடங்கி நில். (அரசனுடைய கட்டளைக்கு அமைந்து நட என்பது கருத்து) 43
சான்றோ ரினத்திரு. ---सत्संग और शिक्षितों के साथ रह.
சான்றோர் - அறிவினாலே நிறைந்தவர்களுடைய, இனத்து கூட்டத்திலே, இரு - (நீ எந்நாளும் சேர்ந்து) இரு 44
சித்திரம் பேசேல்--- सत्य के रूप का झूठ मत बोल.
சித்திரம் மெய்போலத் தோன்றும் பொய்மொழிகளை, பேசேல் - நீ பேசாதே 45
சீர்மை மறவேல்---यश्प्रद गुण मत भूल.
சீர்மை - புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல் - நீ மறந்துவிடாதே. 46
சுளிக்கச் சொல்லேல்.---क्रोध उत्पन्न करने की बात मत करो .
சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக, சொல்லுவேல் (நீ ஒன்றையும்) பேசாதே. 47
சூது விரும்பேல் ---जुआ खेलना --कपट मत चाहो .
சூது - சூதாடலை, விரும்பேல் - (நீ ஒருபோதும்) விரும்பாதே. 48
செய்வன திருத்தச் செய் जो करते हो ,सही अनुपात में करो.
செய்வன - செய்யும் காரியங்களை, திருத்த - செல்வையாக , செய் - நீ செய் 49
சேரிட மறிந்துசேர்.--जिससे मिलकर चाहते हो ,उसे सही पहचान लो.
சேர்இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து, சேர் - நீ அடை
50
சையெனத் திரியேல்.--ऐसे कार्य मत करो ,जिससे बसदे छी ! छी ! कहें.
சை என - (பெரியோர் உன்னைச்) சீ என்று அனைவருக்கும் படி, திரியேல் - (நீ துட்டனாய்த்) திரியாதே. 51
சொற்சோர்வு படேல். ---जो कहना हैं ,उसे मत भूलो.
சொல் - (நீ பிறரோடு பேசும்) சொற்களிலே, சோர்வு படேல் - மறதிபடப் பேசாதே. (சொல்லவேண்டுவதை மறவாமற் சொல் என்பது கருத்து) 52
சோம்பித் திரியேல்--आलसी से मत रहो .
சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல் கொண்டு, திரியேல் (வீணாகத் திரியாதே. 53
தக்கோ னெனத்திரி. ---ऐसे चलो -फिरो कि दुसरे तुम्हें योग्य कहें
தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி - நீ திரி 54
தானமது விரும்பு--दान करना चाहो ,सद्पात्रों को दान करो.
தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு - நீ விரும்பு 55
திருமாலுக் கடிமைசெய்--विष्णु का दास बनो.
திருமாலுக்கு - விஷ்ணுவுக்கு, அடிமை செய் - தொண்டு செய். 56
தீவினை யகற்று. ----पाप कर्म हटाओ.
தீவினை - பாவச் செயல்களை, அகற்று - (நீ செய்யாமல்) நீக்கு. 57
துன்பத்திற் கிடங்கொடேல்--दुःख को स्थान मत दो.
துன்பத்திற்கு - (தொழிலைச் செய்யும்போது முயற்சியினாலே வரும் சரீரப்பிரயத்;தால் ஆகிய) துன்பத்துக்கு, இடம் கொடேல் - (சிறிதாயினும்) இடங் கொடாதே. (அத் துன்பத்தை இன்பமென்று கொண்டு முயற்சியை விடாது செய் என்பது கருத்து. 58
தூக்கி வினைசெய்--सोचकर तौलकर कर्म करो.
தூக்கி - (முடிக்கும் உபாயத்தை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய் - (நீ அதன் பின்பு) செய். 59
தெய்வ மிகழேல்.--ईश्वर की निंदा मत करो.
தெய்வம் - கடவுளை, இகழேல் - (நீ மறந்தாயினும்) இகழாதே. 60
தேசத்தோ டொத்துவாழ்.---जिस देश में रहते हो उस देश के साथ रहो.
தேசத்தோடு - (நீ வசிக்கும்) தேசத்திலுள்ளவர்களுடனே ஒத்து (பகையில்லாமல்) ஒற்றுமையாய், வாழ் - வாழு 61
தையல்சொற் கேளேல்----पत्नी की बात मन मान.ह
தையல் - (உன்) மனைவியுடைய, சொல் - சொல்லை, கேளேல் - நீ கேட்டு நடவாதே 62
தொன்மை மறவேல்---पुरानी दोस्ती मत भूलो.
தொன்மை - பழைமையாகிய சிநேகிதத்தை, மறவேல் நீ மறந்துவிடாதே 63
தோற்பன தொடரேல்---- हार जाने के मुकद्दमा में सम्बन्ध छोड दो.
தோற்பன - தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல் - நீ சம்பந்தப்படாதே. 64
நன்மை கடைப்பிடி--हित का अनुसरण करो.
நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி - (நீ விடாமல்) உறுதியாகப் பிடி
நாடொப் பனசெய் ऐसे कार्य करो ,जिसे सब मानें.
நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும், ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை, செய் - நீ செய் - 66
நிலையிற் பிரியேல். --अपनी सद स्थिति से मत हटो
நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையில் நின்று பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே. 67
நீர்விளை யாடேல்--गहरे पानी में तैरकर मत खेलो.
நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடல் - நீ (நீந்தி) விளையாடாதே. 68
நுண்மை நுகரேல் ---रोग सोचो ,जलपान न खाओ.
நுண்மை - (நோயைத் தகுதி) சிற்றுண்டிகளை, நுகரேல் - உண்ணாதே 69
நூல்பல கல். कई ग्रथों को सीखो.
நூல்பல - (அறிவை வளர்க்கின்ற) நூல்கள் பலவற்றையும், கல் - நீ கற்றுக்கொள் 70
நெற்பயிர் வினை---धान की खेती करो.
நெற்பயி;ர் - நெல்லுப் பயிரை, விளை - (நீ வேண்டிய முயற்சி செய்து) விளைவி. 71
நேர்பட வொழுகு.--ईमानदारी से चलो.
நேர்பட - (உன் ஒழுக்கம் கோணாமல்) செலவைப்பட, ஒழுகு - நீ நட 72
நைவினை நணுகேல்.--दूसरों को बरबाद करने का काम मत करो.
நை - (பிறர்) கெடத்தக்க, வீனை - தீவினைகளை, நணுகேல் - (நீ ஒரு போதும்) செய்யாதே. 73
நொய்ய வுரையேல் अनुपयोगी बात मत कर.
நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல் - (நீ ஒரு பொழுதும்) சொல்லாதே. 74
நோக்கிடங் கொடேல்.---रोग को स्थान मत दो.
நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல் - (அவபத்தியம் முதலானவைகளைச் செய்து) இடங்கொடாதே. 75
பழிப்பன பகரேல்---अपयश की बात मत करो.बुरे शब्द मत बोलो.
பழிப்பன - அறிவுடையவர்களாலே) பழிக்கப்படுவனவாகிய இழிசொற்களை, பகரேல் - நீ பேசாதே.
இழி சொற்களாவன ; பொய், குறளை, குடுஞ்சொல், பயணிச்சொல் என்கிற நான்குமாம். 76
பாம்பொடு பழகேல்.---बुरे लोगों से सम्बन्ध न रखो.
பாம்பொடு - (பால் கொடுத்தவருக்கும் விஷயத்தைத் கொடுக்கிற) பாம்பைப் போல்பவர்களுடனே, பழகேல் - நீ சகவாசஞ் செய்யாதே.
பிழைபடச் சொல்லேல்---गलत बात मत कहो.
பிழைபட - பிழைகள் உண்டாகும்படி, சொல்வேல் - (நீ ஒன்றையும்) பேசாதே.
பீடு பெறநில்---सगर्व खड़े रहो.-
பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக, நில் - நீ (நல்ல வாழ்விலே) நில்.
புகழ்ந்தாரைப் போற்றிவாழ்---तेरे प्रशंसक की स्तुति करो .
புகழ்ந்தாரை - உன்னைத் துதிசெய்து அடுத்தவரை, போற்றி, (கைவிடாமற்) காப்பாற்றி, வாழ் - நீ வாழு 80
பமி திருத்தியுண்--खेती करके खाओ .
ப+மி - உன் விளை நிலத்தை, திருத்தி- சீர்திருத்திப் பயிர்செய்து, உண் - நீ உண்ணு. 81
பெரியாரைத் துணைக்கொள்.--बड़ों को सहायक बनालो.
பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியேரை, துணை கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்கொள். 82
பேதைமை யகற்று.==अज्ञान दूर करो .
பேதைமை - பிறவிக்குக் காரணமாகிய) அஞ்ஞானத்தை, அகற்று - (நீ மெய்ஞ்ஞானத்தினாலே) போக்கு. 83
பையலோ டிணங்கேல்--छोटों से दूर रहो.
பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - நீ கூடாதே பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - நீ கூடாதே. 84
பொருடனைப் போற்றிவாழ்---धन को प्रशंसा कर जिओ .
பொருள் தனை - திரவியத்தை, போற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ் - நீ வாழு 85
போர்த்தொழில் புரியேல்-- लड़ाई का काम मत करो.
போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை, புரியேல் - நீ செய்யாதே. 86
மனந்தடு மாறேல்---दृढ़ मन से रहो.
மனம் - மனசு, தடுமாறேல் - யாதொரு விஷயத்திலும்) கலங்காதே. 87
மாற்றுனுக் கிடங்கொடேல்--अन्यों को स्थान मत दो.
மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடங்கொடேல் - உன்னை நெருங்கிப் பின் வருந்தும்படியாக நீ இடங்கொடாதே . 88
மிகைபடச் சொல்லேன்---अधिक मत बोलो.
மிகைப்பட - (சொற்கள் சுருங்காமல்) அதிகப்படும்படி, சொல்லேல் - நீ சொல்லாதே. 89
மீதூண் விரும்பேல்.---अधिक भोजन मत करो.
முளைமுகத்து நில்லேல்.--लड़ाई -झगड़ों के स्थान पर मत खड़े रहो.
மூர்க்கரோ டிணங்கேல்---मूर्खों से दूर रहो.
மெல்லினல்லா டோள்சேர்.---अपनी पत्नी से ही प्यार करो. वेश्याओं से दूर रहो.
மேன்மக்கள் சொற்கேள்--बड़ों की बात मानो.
மைவிழியார் மனையகல்.---वेश्याओं के यहाँ मत जा.
மொழிவ தறமொழி--बगैर शक के बोलो.
மோகத்தை முனி-- मोह को क्रोधित होकर छोड़ दो .
வல்லமை பேசேல்.---अपनी क्षमता की प्रशंसा मत कर.
வாதுமுற் கூறேல்--बड़ों के सामने चर्चा मत करो.
வாது - வாதுகளை, முன் - (பெரியோர்) முன்னே, கூறேல் - நீ பேசாதே. 99
வித்தை விரும்பு--- शिक्षा हुनर चाहो.
வித்தை - கல்விப் பொருளை, விரும்பு - நீ விரும்பு ; 100
வீடு பெறநில்--मोक्ष पथ पर चल.ज्ञान मार्ग अपनाना.
வீடு - மோஷத்தை, பெற அடையும்படி, நில் - (அதற்குரிய ஞான வழியிலே) நில் 101
உத்தம னாயிரு--उत्तम रह .
ஊருடன் கூடிவாழ்-- अपने शहर के लोगों से मिलकर रखो.(सुख -दुःख में भाग लो )
வெட்டெனப் பேசேல்---नाता -रिश्ता ,दोस्ती काटने के शब्द मत बोल.
வேண்டி வினைசெயேல்-- लाभ को सोचकर बुरे कर्म मत करो.
. 105
வைகறைத் துயிலெழு-- प्रातः काल जल्दी उठो.
ஒன்னாரைத் தேறேல்---दुश्मनों पर भरोसा मत रखो.
ஓரஞ் சொல்லேல்--पक्षपात से दूर रहो.
கொன்றைவேந்தன்=कोनरे वेन्दन
காப்பு
கொன்றை வேந்தன் செல்வ னடியிணை
என்று மேத்தித் தொழுவோ மியாமே.
கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய, வேந்தன் சிவபெருமானுக்கு, செல்வன் - குமாரனாகிய விநாயகக் கடவுளுடைய, அடி இணை - பாதங்களிரண்டையும், என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் - வணங்குவோம், யாம் நாங்கள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
अम्मा -अप्पा माँ -बाप दोनों जाने -पहचाने देव है.
அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன்முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவர். 1
ஆலயந் தொழுவது சாலவு நன்रु
आलय देव की प्रार्थना बहुत कल्याण दायिनी है
ஆலயம் - கோயிலுக்குப்போம், தொழுவது - கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும், நன்று - நல்லது. 2
இல்லற மல்லது நல்லற மன்று.-- गृहस्थ जीवन ही सुधर्म है;संन्यास जीवन नहीं है
இல்லறம் - மனைவியாளோடு கூடிச் செய்யும் அறமானது, நல் அறம் - எளிதிற் செய்யத்தரும் அறமாகும். அல்லது - இல்லறமல்லாத துறவறமானது, அன்று - எளிதிற் செய்யத்தரும் அறமன்றாகும். 3
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்-- कंजूसों की संपत्ति को बुरे लोग भोगेंगे.
ஈயார் - கொடாதவருடைய தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், கொள்வர் அபகரிப்பர் ; 4
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு --कम भोजन करना औरतों को शोभा प्रद है.
உண்டி - போசனம், சுருங்குதல் - (அளவிற்) குறைகள், பெண்டியர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும். 5
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். शहर की दुश्मनी जड़ मूल बरबाद .
ஊருடன் - (தான் இருக்கும்) ஊராருடன் பகைக்கின் - (ஒருவன்) விரோதித்தால், வேருடன் - (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான். 6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகும் -- गणित और अक्षर आँखों के बराबर है.
எண்ணும் - கணிதநூலும், எழுத்தும் - இலக்கணநூலும், கண் எனத் தகும் - (மனிதருக்கு) கண்களென்று சொல்லப்படும். 7
ஏவா மக்கள் மூவா மருந்து --आज्ञा के पहले ही संकेत जानकार संतान काम करेंगे तो वे संतानें देवामृत के सामान है.
ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுவதற்கு முன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள், மூவா மருந்து - (அப் பெற்றவருக்குத்) தேவாமிர்தம் போல்வர். 8
ஐயம் புகினும் செய்வன செய். जो शुभ काम करना है ,उसे भीख लेकर भी कर दो.
ஐயம் புகினும் - பிச்சையெடுத்தாலும், செய்வன - செய்யத்தகும் கருமங்களை, செய் - நீ (விடாது) செய். 9
ஒருவனைப் பற்றி ஓரகத் திரு सद गुणी को पहचानकर वहीं रहो.
ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப்) பற்றிக்கொண்டு, ஒரகத்து - ஓரிடத்திலே தானே, இரு நீ (எப்போதும்) வாசம் பண்ணு. 10
ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் विप्रों को अनुशान वेदों के अध्ययन से श्रेष्ठ है.
வேதியர்களுக்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் - ஆசாரமானது ஓதலின் - (வேதம்) ஓதலினம், நன்று - நல்லது 11
ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு ईर्ष्या करना दौलत का नाश है.
ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல் - (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்துக்கு அழிவு - கேட்டைத் தருவதாகும். 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு. --द्रव्य और रुपयों को बगैर व्यर्थ के कमाओ .
அஃகமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும் சிக்கெனத் தேடு - நீ வீண்செலவு செய்யாமற் சம்பாதி 13
கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை. पतिव्रता का मतलब है पति की आज्ञा मानना.
கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல், (கணவர்) சொல்லுக்கு , திறம்பாமை, தப்பி நடவாமையாம். 14
காவல் தானே பாவையர்க் கழகு.--अपनी पतिव्रता धर्म की खुद रक्षा कर लेना स्त्रीयों के लिए शोभा है.
காவல் தானே - (கற்புக்கு அழிவு வராமல் தம்மைக்) காத்துக் கொள்வதுதானே, பார்வையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும். 15
கிட்டா தாயின் வெட்டென மற.--जो कुछ मिलना असंभव है ,उसे तुरंत भूल दो.
கிட்டாது ஆயின் ’’ (இத்சித்த ஒரு பொருள்) கிடையாதானால், வெட்டென - சீக்கிரத்திலேதானே, மற -(அப்பொருளை) மறந்துவிடு. 16
கீழோ ராயினுந் தாழ வுரை. --छोटों से भी विनम्र व्यवाहार और विनम्र बोली बोलो.
கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்) கீழ்ப்பட்டவராயிருந்தாலும், தாழ - (உன்சொல்) வணக்க முடைய தாய் இருக்கும்படி, உரை - (நீ அவருடன்) பேசு. 17
குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை.--गलतियों और अपराधों को देखें तो नाता-रिश्ता नहीं .
குற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால், சுற்றம் - உறவாவோர். இல்லை - (ஒருவரும்) இல்லை. 18
கூரம் பாயினும் வீரியம் பேசேல். तेज बाण हाथ में है तो भी व्यर्थ बात मत करो.
கூர் அம்ப ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத்தன்மையை பேசேல் - (நீ வீணாகப் பேசாதே. 19
கெடுவது செய்யின் விடுவது கருமம் --दोस्त बुरा करने पर दोस्ती छोड़ना उत्तम कर्म है.
கெடுவது - கெடுவதை, செய்யின் - (தன் சினேகிதன்) செய்தால், விடுவது - (அவன் சினேகத்தை) விடுவதே, கருமம் - (விவேகிக்கு) நற்செய்கையாம். 20
கேட்டி லுறுதி கூட்டு முடைமை. --बरबाद के समय दृढ़ चित्त से रहने से जो कुछ गंवाना पड़े फिर कमा सकते हैं.
கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்திலே, உறுதி - மனந்தளராமை, உடைமை - முன்போல அப்பொருளுடையவனாந் தன்மையை, கூட்டும் - சேர்க்கும். 21
கைப்பொரு டன்னின் மெய்ப்பொருள் கல்வி. अपनी संपत्ति से बड़ी है शिक्षा.
கைப்பொருள் தன்னில் - கையிலிருக்கின்ற பொருளைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் - அழியாத பொருளாவது, கல்வி கல்வியேயாம். 22
கொற்றவ னறித லுற்றிடத் துதவி राजा किसी से परिचित हो तो समय पर मदद मिलेगा,
கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருத்தல், உற்ற இடத்து - (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி உதவியாகும். 23
கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு.----किसी के पीछे उसपर आरोप लगाना आग जैसा जलेगा.
கோட்செவி - கோள் கேட்குங் குணத்தோனுடைய காதிலே குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன் - காற்றுடனே சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப்போல மூளும். 24
கௌவை சொல்லி னெவ்வருக் கும்பகை---दूसरों के निंदक सब का बनेगा दुश्मन.
கௌவை - (பிறர்மேலே) பழிச் சொல்லுகளை, சொல்லின் - (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லோருக்கும், பகை - அவன் பகையாவான். 25
சந்ததிக் கழகு வந்திசெய் யாம--अपने वंश वृद्धि की शोभा अपनी पत्नी से मिलकर रहना.
சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலடியாக, செய்யாமை - செய்யாமல் ( தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம். 26
சான்றோ ரென்கை ஈன்றோட் கழகு.--
माता की शोभा अपने पुत्र को चतुर विद्वान बनाना.
சான்றோர் என்கை - (தன் புத்திரரைக்) கல்வியறிவால் நிறைந்தோர் என்று (கற்றவர்) சொல்லுகிறது. ஈன்றோட்கு பெற்றவளுக்கு, அழகு - அழகாகும். 27
சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு.
शिव की प्रार्थना तपस्या की शोभा.
சிவத்தை - (முதற் பொருளாகிய) பரமசிவத்தை, பேணின் (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - அவன் செய்யும் தவத்திற்கு, அழகு - அழகாம். 28
சீரைத் தேடி னேரைத் தேடு.--सौभाग्य के लिए खेती करो.
சீரை - சௌபாக்கியத்தை, தேடின் (உனக்குத்) தேடுவாயானால், ஏரை - பயிரிடுந் தொழிலை, தேடு - நீ தேடிக் கொள்ளு. 29
கற்றத்திற் கழகு சூழ விருத்தல் --नाते -रिश्ते की शोभा मिलकर घेरकर रहना.
சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு அழகாவது, சூழ் (சுபாசுப கருமங்களிலே பலரும் வந்து) சூழ, இருத்தல் - (சமீபங்களிலே) குடியிருக்கையாகும். 30
சூதும்; வாதும் வேதனை செய்யும். जुआ खेलना और वाद करना दुखप्रद है.
சூதும் - சூதாடுதலும், வாதும் - தருக்கம் பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும். 31
செய்தவ மறந்தாற் கைதவ மாளும். --तपस्या का भूलना अज्ञानता को शासक बनाना .
செய்தவம் - செய்;யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமை கொண்டு) ஆளும். 32
சேமம் புகினும் யாமத் துறங்கு--कारावास में रहने पर भी साढ़े सात
சேமம் - காவற்கூடத்திலே, புகினும் - போய் (ஒரு வேலையும் இல்லாமல்) இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப்பின், உறங்கு - நீ நித்திரை பண்ணு. 33
சையொத் திருத்தா லைய மிட்டுண்.---पैसे हो तो भीख देकर खाओ.
சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால், ஐயம் இட்டு - பிச்சை இட்டு, உண் - நீயும் உண்ணு. (சை - பொருள்) 34
சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்.---जिसके पास सोना है,वह पुरुषार्थ प्राप्त करेंगे.
சொக்கர் என்பவர் - பொன்னுடையவர் என்று சொல்லப்படுவோர், அத்தம் - (அறமும் இன்பமுமாகிய மற்றைப்) புருஷார்த்தங்களையும், பெறுவர் - பெறுவார். (சொக்கு - பொன்)
35
சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர். आलसी दरिद्रता के दुःख भोगेंगे .
சேம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவார். 36
தந்தைசொன் மிக்க மந்திர மில்லை.---पिता के शब्द से बढ़कर कोई मंत्र नहीं है.
தந்தை - பிதாவினுடைய, சொல் - சொல்லுக்கு, மிக்க மேற்பட்ட, மந்திரம் - (பலனைத்தரும்) மந்திரமானது, இல்லை (ஒருவனுக்கு எந் நூலிலும்) இல்லை. 37
தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை.---माताजी से बढ़कर कोई मंदिर नहीं है.
தாயின் - மாதாவைப் பார்க்கிலும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும், - ஒரு ஆலயமும், இல்லை - (ஒருவனுக்கு எங்கும்) இல்லை. 38
திரைகட லோடியுங் திரவியந் தேடு. तरंगों के समुद्र पारकर भी द्रव्य जोड़ो.
திரைகடல் - அலை பொருந்திய கடலிலே, ஓடியும் - (தோணியேறித் தூரதேசங்களிற்) போயானாலும், திரவியம் - திரவியத்தை, தேடு - நீ சம்பாதி 39
தீராக் கோபம் போரா முடியும். --जो क्रोध पूरा नहीं होता वह युद्ध में समाप्त होता.
தீரா - நீங்காத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் - முடிந்து விடும். 40
துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு.पति के कष्ट पर दुखी न होनेवाली औरत गोद में बांधे आग के सामान है.
துடியா - (தன் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - அக்கினிக்கு ஒப்பாவார். 41
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் -अपने पति पर इल्जाम लगानेवाली यम के बराबर है.
தூற்றும் - (தன் கணவன்மேற் குற்றஞ் சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத்தகும் - (அவனுக்கு) யமன் எண்ணத்தகும். 42
தெய்வம் சீறிற் கைதவ மாளும்.ईश्वर नाराज होंगे तो प्राप्त तप पुण्य का भी नाश होगा.
தெய்வம் - தெய்வமானது, சீறின் - (ஒருவனைக் கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்த தவமும், மாளம் - (பயன் கொடாமல்) அழியும். 43
தேடா தழிக்கிற் பாடா முடியும்.--खुद न कमाए संपत्ति को खर्च करें तो दुःख ही बचेगा जान.
தேடாது - ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல், அழிக்கின் - இருக்கிற பொருள்களைச்) செலவழித்தால், பாடா முடியும். (அவனுக்குப்) பின் வருத்தமாக முடியும். 44
தையும் மாசியும் வையகத் துறங்கு--पूस -माघ महीने में भोस्सों की कुतिया में सोओ .सर्दी से बचने .
தையும் - தை மாதத்திலும், மாசி - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனி வருத்தந் தராத) வைக்கோலினால் வேய்ந்த வீட்டிலே, உறங்கு - நீ நித்திரை செய். 45
தொழுதூண் சுவையி னுழுதூ னினிது--दूसरों से माँगी भोजन खाने से खुद खेती करके खाना आनंद दायी है.
தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊன், உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப் பார்க்கிலும், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை - இனிது - இன்பந் தருவதாகும். 46
தோழ னோடு மேழைமை பேசேல் भले ही दोस्त हो उससे अपनी गरीबी मत बोल.
தோழனோடும் - (உன்) சிநேகிதனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கின்ற) சிறுமையை, பேசேல் - (நீ எப்படிப்பட்ட வேளையிலும்) பேசாதே. 47
நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்--- अच्छे सहवास न होना दुखप्रद है.
நல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம் அல்லாதது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண்டாக்கும். 48
நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை----देश भर समृद्धि हो तो कोई बुरी घटना न होगी
நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்;குமாயின், கேடு ஒன்றும் - (திருட்டு முதலாகிய) கேடொன்றும், இல்லை - இல்லையாம். 49
நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை---शिक्षितों का लक्षण वागीश्वर बनना .वचन निभाना.
நிற்க - (ஒருவன் தகுதியான வழியில்) நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொல்லுகளிலே, திறம்பாமை - (ஒரு போதும்) தப்பி நடவாமையாம். 50
நீரகம் பொருந்திய வரகத் திரு---जहां पानी की कमी न हो वहीं रहो.
நீர் - நீர்வளமானது - தனக்குள்ளே, பொருந்திய (மழையில்லாத பஞ்சத்திலும்) அமைந்த, ஊரகத்து - ஊரினிடத்தே, இரு நீ குடியிரு. 51
நுண்ணிய கருமமு மெண்ணித் துணி --छोटे कर्म को भी सोचकर करो.
நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (முடிக்கும் வழியை நன்றாக) ஆலோசித்து, துணி - (நீ முன்பு அதைச்) செய்யத் துணி. 52
நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு--धर्म ग्रंथों को सीखकर शील से रहो. गुण शील बनो.
நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு - நீ நட. 53
நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை.मन में छिपी धोखे के सामान और कोई धोखा नहीं.
நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த - மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை (யாவரிடத்திலும்) இல்லையாம். 54
நேரா நோன்பு சீரா காது-- मन न लगें तो वह व्रत नहीं है.
நேரா - மனசினால் உடன்படாத, நோன்பு - தவமானது, சீர் ஆகாது - சீர்பெற முடியாது. 55
நைபவ ரெனினும் நொய்ய வுரையேல். श्रोता वाद न करके दुखी होगा तो कठोर शब्द मत बोलो.
நைபவர் எனினும் - (கேட்போர் எதிர் பேசாமல்) வருந்துவோராயினும், நொய்ய - அற்ப வார்த்தைகளை, உரையேல் - நீ சொல்லாதே. 56
நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்--अआकार में छोटे लोग भी अपने अपूर्व असाध्य कर्म से बड़े बन जायेंगे.
நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - (செய்காரியத்தால்) யாவரும் விரும்புங் குணத்தையுடையவராவர். 57
நோன்பென் பதுவே கொன்றுதின் னாமை --तपस्या का मतलब है माँस न खाना.
நோன்பு என்பது - தவம் என்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சிவனை) வதை செய்து, தின்னாமை - (அதன் மாசிசத்தை) தின்னாமையேயாம். 58
பண்ணிய பயிரிற் புண்ணியந் தெரியும்---पुन्य-पाप का फल अपने खेत के पैदावार से पता चलेगा.
பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரில் - விளைவினாலும் விளைவின்மையினாலும், புண்ணியம் - (அவ்விடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும். 59
பாலோ டாயினுங் மறிந்துண்----भोजन दूध सहित होने पर भी समय पर खाओ.
பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத் தகும்) காலத்தை அறிந்து, உண் - (நீ அதை) உண்ணு. 60
பிறன்மனை புகாமை அறமெனத் தகும்--पराई स्त्री से इच्छा न रखना ही बड़ा धर्म है.
பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - எல்லாத் தருமங்களினும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும் . 61
பீரம் பேணி பாரந் தாங்கும்--माँ का दूध पीकर बढनेवाला ताकतवर बनेगा.--
பீரம் பேணி - முலைப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான் (அதுபோல முன்னே காரணங்களைக் குறைவறக் கொண்டவன் பின்னே பெரிய காரியங்களையும் வருத்தமின்றி முடிப்பான்) 62
புலையுங் கொலையுங் களவுற் தவிர் माँस खाना ,हत्या करना ,चोरी करना आदि से बचो.
புலையும் - புலால் உண்ணுதலையும், கொலையும் - சீவவதை செய்தலையும், களவும் - பிறர் பொருளைத் திருடுதலையும், தவிர் - (நீ செய்யாது) ஒழித்துவிடு. 63
பரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் --निम्न लोगों को अनुशासन की रुकावटें नहीं. वे अनुशासन हीन रहेंगे.
ப+ரியோர்க்கு - கீழ்மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - தடையானது, இல்லை - (உண்டாதல்) இல்லையாம் 64
பெற்றோர்க் கில்லை சுற்றமும் சினமும்---ज्ञानी को न नाता -न इच्छा न क्रोध न घृणा .
பெற்றோர்க்கு - (மெயஞ்ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும் சினமும் - (மற்றவர் மேல்) வெறுப்பும், இல்லை - இல்லையாகும். 65
பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்---नारियों का भूषण जानी बात को भी अनजान सा रहना .
மடம் - அறிந்தும் அறியார் போன்றிருத்தல். 66
பையச் சென்றால் வையந் தாங்கும்--योग्य उचित पथ पर चलनेवालों को संसार बड़ा मानेगा.
போஜனம் மென்பது தானுழந் துண்டல்===अपने मेहनत से खाना ही भोजन है.
மருந்தே யாயினும் விருந்தோ டுண்----अमृत को भी मेहमानों के साथ खाओ.
மாரி யல்லது காரிய மில்லை--वर्षा न हो तो काम नहीं.
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை जितनी बिजली चमकती ,बाद में उतनी ही वर्षा होगी.
மீகாம னில்லா மரக்கல டோடாது--मल्लाह बगैर नाव नहीं चलेगी .
முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் किसी को बुराई करें तो बाद में हमें बुराई होगी.
மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம் पूर्व ज्ञानियों की बातें अमृत है.
மெத்தையிற் படுத்தல் நித்திரைக் கழகு==गद्दीदार बिस्तर में सोना शोभनीय है.
மேழிச் செல்வங் கோழை படாது----कृषी की संपत्ति कभी कम न होगी .
மைவிழி யார்தம் மனையகன் றெழுகு---वेश्यागमन मत करो .
மொழிவது மறுக்கி னழிவது கருமம்=शिक्षितों की बात न मानने से धंधा में नुक्सान .
மேமான மென்பது ஞான வரம்பு मौन ब्रह्म ज्ञान की चरम सीमा
வளவ னாயினு மளவறிந் தளித்துண் अमीर होने पर भी सोच -समझकर दान करो.
வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் --वर्षा की कमी दान को भी कम कर देगा.
விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்=अतिथि सत्कार न करें तो अपने गृहस्थ जीवन नहीं के बराबर है.
வீரன் கேண்மை கூரம் பாகும்=वीरों की मित्रता तेज तीर सामान है.
உரவோ ரென்கை இரவா திருத்தல்=बलवान का मतलब है ,किसी भी हालत में किसी से न माँगना .
ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு= उत्साह ही संपत्ति की शोभा है.
வெள்ளைக் கில்லைக் கள்ளச் சிந்தை==पवित्र मन वाले कभी ठगी नहीं होते.
வேந்தன் சீறி னாந்துணை யில்லை =राजकोप के व्यक्ति के कोई सहायक नहीं होते.
வையந் தோறுந் தெய்வந் தொழு==तीर्थयात्रा करके सभी देवों से प्रार्थना करो.
ஒத்த விடத்து நித்திரை கொள்==समतल में सोओ .
ஓதாதார்க் கில்லை உணர்வோடு வொழுக்கம்--अशिक्षितों को नहीं अनुशासन और चालचलन .
|