Thursday, August 16, 2018

அடல் பிஹாரி வாஜ்பாய் கவிதை

முன்னாள் பாரதப் பிரதமர் இன்று இறைவன் அடி சேர்ந்து விட்டார். ஆனால் அவர் ஆத்மா
இங்குதான் இருக்கும். இறைவனுக்குள்
ஐக்கியம் ஆவதை விட அவர் ஆத்மா
பாரதத்தில் ஐக்கியமாகும் .
அவர் கவிதைகள் அனைத்தும் காஷ்மீர் முதல் 
கன்னியாகுமரிவரை ஐக்கியப்படுத்துவதே.
அதற்காக அவர் செய்த அரிய பெரிய சாதனை
தேசீய நெடுஞ்சாலை.
உண்மையான தேசத்தொண்டர் . அவரைப் பற்றி
நாம் சிந்திப்போம் .
அவர் அமரகவிதைகளில் ஒன்று.
ஆகஸ்ட் பதினைந்து சொல்கிறது :
அடையவில்லை சுதந்திரம்
இப்பொழுதும் முழுமை .
நமது கனவுகள் மெய்யாவது மீதம் இருக்கிறது.
ராவி ஆற்றங்கரை சபதம் இன்னும்
முழுமை யடையவில்லை.
அந்த தியாகிகளின் பிணங்கள் மேல்
கால் வைத்து விடுதலை
பாரதத்திற்கு வந்தது.
அவர்கள் இப்பொழுதும்
நாடோடிகள்.
துன்பத்தின் கருமேகங்கள்
சூழ்ந்துள்ளன.
கொல்கொத்தாவின்
நடைபாதையில் புயலை
சகிக்கிறார்கள் .
பதினைந்து ஆகஸ்ட் பற்றி
அவர்களிடம் கேளுங்கள் .
என்ன சொல்கிறார்கள் என?
ஹிந்துக்களாக அவர்கள்
சொல்வதைக்கேட்டு
நாணம் வரவில்லையா ?
எல்லையின் அப்பக்கம் செல்லுங்கள்
நாகரீகம் நசுக்கப்படுகிறது.
மனிதன் அங்கே விற்கப்படுகிறான் .
நேர்மை நாணயம் வாங்கப்படுகிறது .
இஸ்லாமியர்கள் தேம்பித்தேம்பி அழுகிறார்கள்.
புன்னகைக்கிறது
மனதிற்குள் டாலர் .
பசியில் வாடுபவர்களுக்கு
தோட்டா கொடுக்கப்படுகிறது .
ஆடையில்லாதவர்களுக்கு
ஆயுதங்கள் அணிவிக்க்கப் படுகின்றன.
தாக்கத்தால் தவிப்பவர்களிடம்
ஜகாத் முழக்கங்கள்
முழங்க வைக்கிறார்கள்.
டாக்க , கராச்சி , லாகூரில்
கேட்கிறது மரண ஓலம் .
பக்தன் ,கில்கித்த்தில்
துன்பப்படுவோரின்
அடிமைகளின் நிழல் .
அதனால் தான்
சுதந்திரம் முழுமையாக
கிட்டவில்லை என்கிறேன்.
நான் எப்படி சுதந்திரத்தைக்
கொண்டாடமுடியும் ?
துடுப்பாட்ட பாரதத்தை
மீண்டும் இணைப்போம்.
அகண்ட பாரதமாக்குவோம் .
கில்கித்த்தில் இருந்து காரோ மலை வரை
விடுதலை நாள் கொண்டாடுவோம்.
இன்றே தயாராவோம்.
அந்த பொன் நாளுக்காக .
பெற்றதை இழக்கக்கூடாது .
இழந்ததை நினைவில் கொள்வோம்.
(பாரதப்பிரதமர் ஸ்வர்கீய அடல் பிஹாரி வாஜ்பாய். )
தமிழாக்கம் : எஸ் .அனந்தகிருஷ்ணன்.

पंद्रह अगस्त का दिन कहता:
आज़ादी अभी अधूरी है।
सपने सच होने बाकी है,
रावी की शपथ न पूरी है॥
जिनकी लाशों पर पग धर कर
आज़ादी भारत में आई,
वे अब तक हैं खानाबदोश
ग़म की काली बदली छाई॥
कलकत्ते के फुटपाथों पर
जो आँधी-पानी सहते हैं।
उनसे पूछो, पंद्रह अगस्त के
बारे में क्या कहते हैं॥
हिंदू के नाते उनका दु:ख
सुनते यदि तुम्हें लाज आती।
तो सीमा के उस पार चलो
सभ्यता जहाँ कुचली जाती॥
इंसान जहाँ बेचा जाता,
ईमान ख़रीदा जाता है।
इस्लाम सिसकियाँ भरता है,
डालर मन में मुस्काता है॥
भूखों को गोली नंगों को
हथियार पिन्हाए जाते हैं।
सूखे कंठों से जेहादी
नारे लगवाए जाते हैं॥
लाहौर, कराची, ढाका पर
मातम की है काली छाया।
पख्तूनों पर, गिलगित पर है
ग़मगीन गुलामी का साया॥
बस इसीलिए तो कहता हूँ
आज़ादी अभी अधूरी है।
कैसे उल्लास मनाऊँ मैं?
थोड़े दिन की मजबूरी है॥
दिन दूर नहीं खंडित भारत को
पुन: अखंड बनाएँगे।
गिलगित से गारो पर्वत तक
आज़ादी पर्व मनाएँगे॥
उस स्वर्ण दिवस के लिए आज से
कमर कसें बलिदान करें।
जो पाया उसमें खो न जाएँ,
जो खोया उसका ध्यान करें॥

No comments:

Post a Comment