Thursday, August 9, 2018

वृन्द के दोहे --வ்ருந்தரின் ஈரடி

 ஹிந்தியில்   கபீர் ,துளசி ,ரஹீம் ,பிஹாரி லால், போன்று
விருந்தரும்   தோஹே   அதாவது  ஈரடி எழுதியுள்ளார் .

திருவள்ளுவரின்  திருக்குறள் போன்று இவர்களும்  அவர் போன்ற  கருத்துக்களை  ஈரடியாக எழுதி புகழ் பெற்றவர்.

இன்று  அவரின்  சில  ஈரடிகளைக் காண்போம்.

1.    எல்லோரும்  சுயநல  நண்பர்களே.
       சுயநலமின்றி  யாருமே இல்லை.
      கொக்கு ,நாரை   நீர் உள்ளவரை  தான்
      ஒரு குளத்தில் இருக்கும் .
      நீர் வறட்சி ஏற்பட்டால்
       அந்த  குளத்தை விட்டு பறந்துவிடும்.
             அவ்வாறே  நம்மிடம் இருந்து ஏதாவது கிடைக்குமா
     என்று எதிர்பார்க்கும்  நண்பர்களே  அதிகம்.
     வறுமையில்  உதவ வருபவர்கள் குறைவே.


2. நல்ல குணம்  இருந்தால் தான்
நமக்கு மதிப்பு.
   இயல்பான நல்ல குணம் ,
அழகு உள்ள கிளியை வளர்ப்போர் அதிகம் .
காகத்தை யாரும் வளர்க்கமாட்டார்கள்.
 அது  இறந்த முன்னோர்கள் போல் .
அது நகரத்தை சுத்தம் செய்யும் .
ஒருநாள் அழைத்து உணவு படைப்பர்.
அதன் குணம் சரியில்லாததால்
 மதிப்பு இல்லை.

3.கல்விச் செல்வம்  என்பது  கடின உழைப்பு,
கவனத்தால் வருவது.
நூல்கள் வாங்கி அடுக்குவதால்  ஞானம் வராது.
நூல்கள் பொருளுணர்ந்து படிக்க வேண்டும்.
விசிறி வாங்கினால் காற்று வராது.
அதை கையில் எடுத்து வீசினால் தான் காற்றுவரும்.அதுபோல் நூல்களை
 வாசிக்கவேண்டும்.
4.நல்லவர்கள் -கெட்டவர்கள் ஒரே மாதிரி
இனிமையாகப் பேசமுடியாது.
 வசந்தகாலம் வந்தால் குயிலின்
 இனிய குரலும்
காகத்தின்
 கர்ணகொடூரக் குரலும்
தெரிந்துவிடும்.
 நிறம் காகத்திற்கு குயிலுக்கு ஒன்றே.
ஆனால்  குரல் மற்றும் குணம்  வேறுபட்டதே.

5. எல்லோரும்  பலமுள்ளவர்களுக்கே
 உதவுவார்கள்.
 அதிகாரபலம் ,பணபலம் ,குணபலம் , ஞானபலம் ,உடல்பலம் ஆனால்  அதிகார பலம் , பணபலம் மதிப்பு மிக்கது.

காற்று நெருப்பை அதிகமாக பற்றவைக்கும்.
 காட்டுத்தீ பரவும் .
ஆனால்   காற்று விளக்கை  அணைத்துவிடும் .




No comments:

Post a Comment