Sunday, January 31, 2016

உலகியலும் உலகநாதனும்

அறிவியல்  வளர்ச்சி
ஆன்மீகத்தில் வளர்ச்சி.
வலைதளம் யூட்யூப் அனைத்திலும்
ஆன்மீக இறைவழிபாடு.
இந்த வளரச்சி இருந்தாலும்
உலகியலுக்கென கவர்ச்சி
உலகியல் கவர்ச்சியில்
உலகநாதனின் கவர்ச்சி
ஆடம்பரமான நிலை.
தெய்வீக பக்தி என்பது
தெய்வீகப்பணிகளுக்கு நன்கொடை என்பதிலேயே
ஆத்ம திருப்தி
  அரிய படைப்புகள் அதிசயப்படைப்புகள்
ஆண்டவனின் படைப்புகள்.
அதை மறக்கச்செய்யும்
அறிவியல் படைப்புகள்
உலகியல் இன்பமே முந்துவது
பணம் பணம் ஆடம்பரம் .
இந்த ஆடம்பரம்  உண்மை
நிலை மறக்காமல்
உலகநாதனை நினைக்கவே
இயற்கை மாற்றங்கள் சீற்றங்கள்
சந்திரனில் காலடி வைத்தாலும்
சங்கடமில்லா பயண வெற்றிக்கு
அவனைத் தொழும் நிலை.
உலகியல் இன்பங்கள்  தற்காலிகமானவை என்பதற்கே
அறிவியல்  ஆற்றல் மீறிய நிகழ்ச்சிகள்
மனிதனுக்கு புலப்படாத விசித்திரங்கள் .
உலகநாதனைத் தொழவைக்கும் .
அங்குதான் ஆண்டவனின் அளப்பறிய ஆற்றல்.
ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னும்  இறைவனின் சக்தி.
அன்பு அடக்கம் உண்மைகடமைநேர்மை
இதைவையகத்தில்  நிலைக்கச்செய்கிறது.

No comments:

Post a Comment